20 Feb 2014

காட்டு யானைகளின் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு

SHARE
 (வராதன்)

காட்டு யானைகளின் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த அனைத்து பிரச்சனைகளுக்கும் கடந்த 17 அன்று உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, தெரிவித்தார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து ஒரே அமர்வில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெற்றுவரும் காட்டு யானைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முதலாவது கூட்டம் நேற்று மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் உள்ளிட்டோரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் வன விலங்குத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பின்வரும் கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக் கொண்டு உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப் பட்டதாக அமைச்ச்சர் இதன்போது தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலாளர் பரிவுகளில் மின்சார வேலி அமைத்தல்.
மின்சார வேலி அமைப்பதற்கு தலா 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தல்.
மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமாக இயங்கி வந்த வன ஜீவராசிகள் காரியாலயத்தினை மட்டக்களப்பு மாவட்த்திற்கென தனியான காரியாலயம் அமைத்தல்.
வன ஜீவராசிகள் மாவட்ட காரியாலயத்திற்கு தமிழ் பேசும் அதிகாரிகளை நியமித்தல்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படுவான்கரைப் பிரதேசத்தல் இரண்டு உப வன ஜீவராசிகள் காரியாலங்களைத் திறத்தல்.
காட்டு யானைகளினால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நட்ட ஈட்டினை 85000 ரூபாவாக உயர்த்துதல்.
காட்டு யானைகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும், வீடழிப்புக்கும் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கும் உடனடியாக இழப்பீடுகளை வழங்குதல். 
காட்டு யானைகள் ஊடுருவும் பிதேசங்களை மையப்படுத்தி பனை மரங்களை நடல், அதற்காகவேண்டி பனை அபிருத்தி சபைக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்.
மேலும் தற்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் தங்கி நிற்கும் காட்டு யானைகளை அடுத்த ஒரு வார காலத்திற்குள் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை  எடுத்தல்.

போன்ற கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

மேற்படி கோரிக்கைகள் அனைத்தினையும் நாம் ஏற்று நிவர்த்தி செய்வதாக வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: