20 Feb 2014

SHARE
(கமல்)

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான  இலவசக் கல்விக் கருத்தரங்கும்.

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான  இலவசக் கல்விக் கருத்தரங்கும், மணவர்களின் பெற்றோர்களுக்காக விழிப்பூட்டல் கருத்தரங்கும், பட்டிருப்பு மத்தியமகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடந்த 17 அன்று இடம் பெற்றது.

இலங்கை வங்கியின் பிரதான அனுசரணையுடனும் மஞ்சி பிஸ்கட் மற்றும் கெமிலஸ் பப்பிளிகேசன் ஆகியவற்றின் இணை அனுசரணையுடனும் இந் நிகழ்வு இடம்பெற்றது

பெற்றோரும், மாணவர்களுமாக 200 அதிகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி இலங்கை வங்கி முகாமையாளர் கே.ரெட்ணகுமார் களனி கல்வி வலயத்தின் தமிழ் பிரிவுக்கான கல்விப் பணிப்பாளர் ரி.கணேசராசா மற்றும் கொழும்பு கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கமிட், கொமிலஸ் பப்பிளிகேசன் இணைப்பாளர் பற்றுவிட்ட, மட்டக்களப்பு கல்வியல் கல்லுரி விரிவுரையாளர் எம். தயானந்தா ஆகியோர் இனைந்து பெற்றோருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்கினை கொழம்பு கல்விவலய ஆசிரியர் திருமதி.நவ்பால்டின் அவர்கள் நாடத்தியிருந்தார.; இதன் போது மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டு எழியமுறையிலான பயிற்சிகளுக்கான வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கின் போது பிள்ளைகளை புலமை பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்கள் தயார் படுத்தும் போது பிள்ளைகளுக்கு சுமையை தவிர்த்து எவ்வாறு பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டும்.

பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப உளநிலையை கருத்தில் கொண்டு எவ்வாறு பிள்ளைகளுடன் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சிகரமான கற்றலை பிள்ளைகளுக்கு வழங்குவதில் பெற்றோர்கள்  நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.

தற்காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் நிலைமைக்கேற்ப மாற்றமடைந்து அதற்கேற்ப பிள்ளைகளை மாற்றுவது.  

இவைகளுக்கான செயற்பாடுகளில் பெற்றோர்கள் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்பது பற்றியும் இதன் போது பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.







SHARE

Author: verified_user

0 Comments: