4 Feb 2014

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

SHARE
(துசாந்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மேற்படி ஒன்றியத்தின் தலைவர் த.மேகராச அவர்களின் தலைமையில் நேற்று (03) அரசடித்தீவு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இவ்வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது சென்ற வருடம் (2013) ஒன்றியத்தினால் அமுல்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்செல்ன், ஓய்வு பெற்ற கொத்தணி அதிபர் க.சந்திரசேகரம், மற்றும் பட்டிப்பளை கோட்ட அதிபர்களான ,கே.தியாகராசா, மா.வன்னியசிங்கம், த.சோமசுந்தரம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் எஸ்.சாந்தலிங்கம், மற்றும் ஒன்றியத்தின் கலைஞர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பாரம்பரிய கலைகளையும், இலக்கியங்களையும் “பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியம்”  கட்டி காத்து அவற்றினைக் கடைப்பிடித்தும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், கௌரவித்தும் வருவதோடு, கல்வி வளர்ச்சிக்காகவும் பல சேவைகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: