4 Feb 2014

“மாயைத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்”

SHARE
 (கமல்)
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் குணசிங்கம்-சுகுணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகிழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்களும் இணைந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தினை நடாத்தியிருந்தனர்.

ஊர்வலம் வைத்தியசாலையிலிருந்து புறப்பட்டு களுவாஞ்சிகுடி, பிரதான வீதி வழியாகச் சென்று மார்கட் வீதிவழியாக வந்து மீண்டும் வைத்தியசாலையினை வந்தடைந்தது.

“மாயைத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்” என்ற தொணிப் பொருளின் கீழ் இவ்வருடம் உலக புற்றுநோய் வழிப்புணர்வு மகுட வாக்கியமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இலங்கையில் மார்பகப் புற்றுநோய் 16.08 வீதமும், வாய்ப்புற்றுநோய், 11.3 வீதமுமாகக் காணப்படுவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் குணசிங்கம்-சுகுணன் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: