(சக்தி)
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனமும் சுகநல சேவைகள் கிறிஸ்தவ ஜக்கிய அமைப்பும் இணைந்து நோயாளர்களை பராமரிக்கும் உதவியாயர்களுக்கான அடிப்படைப் பயிற்சியானது கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று நேற்றுடன் (17) முடிவுற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ தலைவர் வி.டி.செகராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அதன் பொதுச் செயலாளர் கலாநிதி டி.டி.டேவிட் மற்றும் நோயாளர்களை பராமரிக்கும் 28 உதவியாயர்கள் என பலர் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இப்பயிற்சியின்போது பெற்றார்கள் , பாதுகாவலர்கள், உறவினர்கள் போன்றோர் நோயாளர்களை எவ்வாறு பராமரித்தல், தொற்றுநோய்கள் ஏற்படாது எவ்வாறு பராமரித்தல், போசணை உணவுகளை நோயளர்களுக்கு வழங்குதல், வைத்திய சாலையில் உள்ள நோயாளிகளை எவ்வாறு தரிசித்தல், நோயாளிக்கான ஆன்மீகத்தில் வழிநடத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடங்கலாக இப்பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியினை சுகநலசேவை கிறிஸ்தவ ஐக்கிய அமைப்பின் நிர்வாக உத்தியோகஸ்தர் ராஜா.ஜோண், மருத்தவ தாதி ஏஞ்சல் வில்ஸ், (ருளுயு) மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர். கிரேஸ் நவரெட்ணராஜா ஓய்வு பெற்ற மட்டக்களப்பு தாதியர் பாடசாலையின் அதிபர் திருமதி. மலர்.வீரசிங்கம், மற்றும் தாதியர்களான திருமதி.ப.ராஜரதி, திருமதி.வானதி, திருமதி.மேர்சி ஆகியோர் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
இன்நிகழ்வின் இறுதியில் பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
0 Comments:
Post a Comment