16 Feb 2014

தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் மனதில் மாற்றங்கள் வந்தால்தான் எதிர் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

SHARE
(வராதன்)
வெளிநாட்டவர்கள் அனைவரும் வடக்குக்குத்தான் செல்கின்றார்கள் டேவிற் கெமெரன் வந்தாலும் சரி அமெரிக்கர்கள் வந்தாலும் வடக்குக்குத்தான் செல்கின்றார்கள் இங்குள்ள கிழக்கு மக்களைப் பற்றி கதைப்பதங்கு அவர்களில் யாரும் இல்லை.

வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று எவ்வளவு கலாலமாகி விட்டது ஆனால் வட மாகாண முதலமைச்சர் கிழக்குவாழ் மக்களைப் பற்றி இது வரைக்கும் ஒரு அறிக்கையோ அல்து கருத்துக்களையோ தெரிவிக்கவில்லை.

என மீழ் குடியேற்றப் பிரத்தியமைச்சர் விநாயகமூர்தி-முரளிதரன் தெரித்துள்ளார்.

நேற்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள அரசடித்தீவு கிரமத்தல் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் மனதில் மாற்றங்கள் வந்தால்தான் எதிர் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஏனெனில் ஒரு தமிழ் அதிகாரியினைத் தக்கவைப்பதற்கு மிகவும் கடினமான முறையில் போராட வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் தொகுதி பட்டிருப்பு தேர்தல் கொகுதியாகும் மட்டக்களப்பினை எவ்வாறு காப்பாற்றப் போகின்றோம் என்பது இந்த பட்டிருப்பு தொகுதி மக்களின் கையில்தான் தங்கயுள்ளது. ஏனெனில் எதிர் காலத்தில் அதிகாரமுடைய நபர்களை உருவாக்கிட வேண்டும். அவ்வாறு உருவாக்காமல் விட்டால் ஒட்டுமொத்தத்தில் நட்டம் ஏற்பட்டு விடும். 

இவைகளனைத்திற்கும் எதிர்ப்பு அரசியிலில் இருந்து கொண்டு சாதிப்பது என்பது சாத்தியமற்ற விடயம் அரசுடன் இருந்து கொண்டு எமது மக்களுக்காக குரல் கொடுக்கலாம்.

அண்மையில் இந்தியா இருந்து வந்த ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமியினை மட்டக்களப்பில் அவர் வருகை தந்தபோது சந்தித்தேன் அவர் என்னிடம் கேட்டார் அம்மான் நீங்கள் எவ்வாறு அரசாங்கத்துடன் இருந்து கொண்டு 13 வது திருத்தச் சட்டம் வேண்டும் என்று நீங்கள் ஒருவர் மட்டுமே மிகவும் துணிச்சலுடன் கதைக்கின்றீர்கள் என என்னிடம் கேட்டார்.

உண்மையிலே 13 வது திருத்தச் சட்டம் தேவை என பாராளுமன்றத்தில் கதைத்தது நான் மட்டும்தான். அதனை செய்ய வேண்டும். எதிர் கட்சிகள் கதைத்ததோ என்னவோ தெரியாது. 

இதுபற்றி எதிர் கட்சிகள் கதைத்தும் ஒன்றும் செய்ய முடியாது அரசியல் என்பது எமது உரிமை அந்த வகையில் அரசு பக்கமிருந்து நான் கதைத்துள்ளேன்.

இதுபோன்று எதிர் காலத்தால் தமிழ் மக்களின் அபிவிருத்திகளுக்கு வளங்களை எடுத்தியம்பக் கூடிய நபர்களை உருவாக்கிவிட வேண்டும். இவைகளுக்கு தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றினை விடுத்து எதிர்ப்பு அரசியலுக்கு போயிருந்தால் வெறுமனே அறிக்கை அரசியலாகத்தான் போய்விடும்.

தற்போதிருக்கின்ற அபிவிருத்தியினையும் உரிமைப் போராட்டத்தினையும் ஒன்றாக நோக்குவோம். 

தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன அபிவிருத்தி வேண்டாம் உரிமை மட்டும்தான் வேண்டும் என கத்திக் கொண்டு திரிகின்றார்கள். இவற்றுக்கு உரிமைக்காக ஒருவரிடமும், அபிவிருத்திக்காக இன்னொருவரிடமும் ஏன் போகவேண்டும்?, இவ்விரண்டினையும் பெறுவதற்கு ஏன் நாங்கள் ஒருவரிடம் போகக்கூடது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் ஒருமித்து கேட்குமிடத்துத்தான் உரி அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றில் தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.  நான் எனக்கென்று நான் உங்களிடம் ஒருபோதும் எதுவும் கேட்கவில்லை, நான் இருக்கம் வரைக்கும் மக்களுக்குரிய நீண்டகால அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். இதனை தற்போது மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

படுவான்கரைப் பகுதியின் எல்லைப்புறக் கிராம மக்களுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப் பட்வுள்ளன. அபோல் வவுணதீவு குடிநிர் திட்டத்தனூடாக படுவான்கரை கரையோர மக்களுக்கு குடி நீர் வழங்கப் படவுள்ளன இந்த பல்லாண்டு அபவிருத்தித் திட்டங்களுக்கு பல மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

தற்போதைய இந்த காலம்தான் அபிவிருத்திக்கான நிதிகளை பெறக்சூடியதாகும். எதிர் வரும் மே மாதம் மண்முனை பாலம் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்படவுள்து. அடுத்து மண்டூர் பாலம் மற்றும் கிரான், பாலங்கள் கட்டுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.  

அரசாங்கத்தின் பக்கமிருந்து பல விடையங்களைச் சாதிக்கலாம் அவற்றுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தவர் ஒரு தமிழர். அதுபோல் சிறந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினீர்களாக இருந்தால் அவர்கள் உரிமையினையும் காப்பாற்றி அபிவிருத்திகளையும் கொண்டு வந்திடுவார்கள்.

“காத்தான்குடியில் இருக்கின்ற நல்லாட்சிக்கான இயக்கம்” சொல்லியிருக்கின்றது கருணா அம்மானையும், பிள்ளையானையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றது. அதன் நோக்கம் என்ன தடையாய் இருப்பவர்கள் யார், என்பது அவர்களுக்குத் தெரியும். இதனை விட கடந்த காலங்களில் ஓட்டமாவடியில் பஸ்ஸை மறித்து தமிழர்களின் கழுத்தை வெட்டி எறிந்தார்கள்? ,  தமிழ் மக்கள் சென்ற எத்தனை பஸ்ஸை மறித்து கொழுத்தி தள்ளினார்கள்? இதற்கு யார் பதில் சொல்வது. 

நாங்கள் இனப்பிரச்சனை வேண்டாம் என்பதற்காக அனைத்தனையும் விடுத்து இருக்கின்றோம. ஆனால் இவைகளை ஏன் மீண்டும் கொண்டு வருகின்றார்கள் என்றால் தமிழ் மக்கள் மத்திக்கத்தல் தாக்கத்தினைச் செலுத்த வேண்டும் என நினைக்கின்றார்கள். ஆனால் இவைகள் நடைபெறுகின்ற விடையம் இல்லை ஆனால் நமது மக்கள் சிந்தித்து விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் வந்துள்ளது.

18 வீதம்  தமிழ் போசுகின்ற மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் நாங்கள் சிறந்த ஒரு சிங்கள தலைமையினை உருவாக்க வேண்டும். 

கற்போது பார்த்தால் காத்தான்குடி பல துறைகளிலும் வளர்ச்சியடைகின்றது என்றால் அங்கு ஒரு அரசியல் பலம் இருக்கின்றது. அதுபோல் ஏறாவூரை எடுத்துக் கொண்டால் அங்கு ஒரு கபினட் மினிஸ்ட்டர் இருக்கின்றார். இவைகளனைத்தினையும் பார்த்து எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியது காலம் தற்போது வந்துள்ளது. 

இது இவ்வாறு இருக்க வெளிநாட்டவர்கள் அனைவரும் வடக்குக்குத்தான் செல்கின்றார்கள் டேவிற் கெமெரன் வந்தாலும், அமெரிக்கர்கள் எவர் வந்தாலும் வடக்குக்குத்தான் செல்கின்றார்கள் இங்கு கிழக்கு மக்களைப் பற்றி கதைப்பதங்கு அவர்களல் யாரும் இல்லை.

வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று எவ்வளவு கலாமாகி விட்டது ஆனால் வட மாகாண முதலமைச்சர் கிழக்குவாழ் மக்களைப் பற்றி இதுவரைக்கும் ஒரு அறிக்கையோ அல்லது கருத்துக்களையோ தெரிவிக்கவில்லை.

ஏனெனில் வடக்கிலுள்ள அரசியல் தலைமைகள் அவர்களை மாத்திரம் தான் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள் எம்மைப்பற்றி கணக்கல் எடுக்கமாட்டார்கள் இதனை இங்குள்ள எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: