(வரதன்)
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது .முதலில் தேசிய கொடியேற்ற எற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதன் பின்னர் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆணையாளர் தமது உரையில் நாம் இன்று கொண்டாடும் சுதந்திர தின நிகழ்விற்கு எமது முன்னோர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் அத்திவாரங்களாக அமைவதுடன் எமது சேவைகளூடாக நாம் பொதுமக்களுக்கு உரிய கேளரவத்தையும் மரியாதையையும் வழங்க முடியும். இது எமது சுதந்திர தின உறுதிப்பாடாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் கணக்காளர் பொறியியலாளர் கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் நிருவாக உத்தியோகத்தருடன் மாநகர சபையின் அலுவலர்கள்ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment