18 Jan 2014

மட்டக்களப்பில் போக்குவரத்துக்கு இடைய+றாகவிருந்த சட்டவிரோத மீன் வியாபாரிகள் மீது மாநகர சபையினால் நடவடிக்கை முன்னெடுப்பட்டுள்ளது.

SHARE
(வரதன்)
மட்டக்களப்பு மாநகரசபையின் தூய்மை வாரத்தை முன்னிட்டு பொதுச்சுகாதார உத்தியோகத்தர் தேவநேசன் அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய பாலத்தடியில் போக்குவரத்துக்கு இடைய+றாகவிருந்த  சட்டவிரோத மீன் வியாபாரிகள் மீது மாநகர சபையினால் நேற்று (17) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக  இந்த மீன் வியாபாரிகள் உடன் அப்புறப் படுத்தப் பட்டனர். 

கடந்த சில மாதங்களாக அதிகளவிலான வியாபாரிகள் இப்பகுதியில் வீதியின் இரு மருங்கிலும்  வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருந்த இவர்கள் மீது மாநகர சபை ஆணையாளரின் உத்தரவுக்கமைய சகல விற்பனையாளர்களும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டனர்.

மாநகர சபைப் பொறியியலாளர் பா.அச்சுதன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.பிரான்சிஸ் ஆகியோரின் மேற்பார்வையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாநகர சபைக்கு கடந்த முதலாம் திகதியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணையாளரின் இந்நற்செயல்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: