19 Jan 2014

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு , வலது குறைந்த பெண்களின் கைவினை உற்பத்தி செயற்பாடுகளுக்காக கி.மா.உ பிரசன்னா இந்திரகுமார்உதவி.

SHARE
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு , வலது குறைந்த பெண்களின் கைவினை உற்பத்தி செயற்பாடுகளுக்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமாரின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு லெட்சம் ரூபா செலவில் கைவினை உற்பத்தி செயற்பாடுகளுக்குரிய உபகரணங்கள் மற்றும் கருவிகள் (அச்சுகள், கத்தி, சுத்தியல், சட்டி) நேற்று (18) வழங்கட்டன.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் மூலம் யுத்தத்தினால் பாதிக்கடப்பட்டு வலது குறைந்த பெண்களினைக் கொண்டு கைவினை உற்பத்திப் பெருட்கள் செய்யப்பட்டு வருகின்றன.

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகத்தினர் கைவினைச் செயற்பாடுகளில் ஈடுபடும் பாதிக்கப்பட்ட பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டு கல்லடியில் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் மூலம் யுத்தினால் பாதிக்கப்பட்டு வலது குறைந்த பெண்கள் 20 பேர் இக் கைவினைச் செயற்பாடுகளில் பன் புல்லைக் கொண்டு தொப்பி, வேக், பூசைத்தட்டு, மேசைத்தட்டு , மலர்ச் சென்டு, பேன்ற உற்பத்திகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும;
















SHARE

Author: verified_user

0 Comments: