பிரிட்டன் நாட்டை சேர்ந்த Sarah Brooks என்ற ஆசிரியை திருமணமானவுடன் தேனிலவுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு தனது கணவருடன் சென்றிருந்தார். அங்கு Safari park rampage என்ற மிருகக்காட்சி பூங்காவை இருவரும் காரில் சுற்றிப்பார்த்தனர். அப்போது எதிரே வந்த மதம் பிடித்த யானை ஒன்று அவர்கள் சென்ற காரை அடித்து துவம்சம் செய்ததால் அதில் இருந்த இருவரும் படுமாயம் அடைந்தனர். இந்த காட்சியை பின்னால் சென்றுகொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த Lincolnshire பகுதியை சேர்ந்த Sarah Brooks மற்றும் அவரது கணவர் இருவரும் திருமணமானவுடன் உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு இறுதியாக தென்னாப்பிரிக்காவுக்கு வந்தனர். அங்குள்ள மிகப்புகழ் பெற்ற Safari park rampage என்ற பூங்காவை இருவரும் காரில் சென்று சுற்றிப்பார்த்தனர். அப்போது மதம் பிடித்த யானை ஒன்று அவர்கள் சென்ற காரின் எதிரே வந்து காருக்கு வழிவிடாமல் குறுக்கே நின்றது. யானைக்கு மதம் பிடித்ததை அறியாமல் காரை ஓட்டி வந்த ஆசிரியை, தொடர்ந்து ஹார்ன் அடித்துள்ளார். அந்த சத்தத்தால் மேலும் எரிச்சலடைந்த யானை காரை தனது தும்பிக்கையால அடித்து துவம்சம் செய்தது. காரை தலைகீழாக புரட்டி போட்டி காரில் இருந்தவர்களை பயங்கரமாக தாக்க ஆரம்பித்தது.
காரில் இருந்த ஆசிரியை Sarah Brooks ஐ தனது கூரிய தந்தங்களால் குத்தி கிழித்தது. இதுகுறித்த தகவல் அறிந்த பூங்கா காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டிமுயற்சித்தனர். ஆனால் தொடர்ந்து யானை அவர்களையும் தாக்க வந்ததால் வேறு வழியின்றி சுட்டுக்கொன்றனர். படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது கணவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment