தாங்கள் எவ்வித உடலுறவும் கொள்ளாமல் அமெரிக்க பெண்கள் கர்ப்பம் அடைந்திருப்பதாக புதிய ஆய்வொன்று வெளியிடப்பட்டுள்ளது்
அமெரிக்காவில் பெண்கள் எந்த வயதில் கர்ப்பமாகிறார்கள் என்பது குறித்த ஆய்வொன்று நடத்தியபோது அதில் 1 சதவிகித பெண்கள் கன்னித்தன்மை இருக்கும்போதே கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த ஆய்வு நிறுவனம்15 முதல் 28 வயது வரை உள்ள 7,870 பெண்களிடம் ஆய்வு செய்தபோது அவர்களில் சுமார் 1 சதவிகித பெண்கள் தாங்கள் இன்னும் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்றும் ஆனால் தாங்கள் கர்ப்பமடைந்து உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எந்த ஒரு ஆணிடமும் தாங்கள் உடலுறவு கொள்ளவில்லை என்றும் ஆனால் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். செயற்கையாக கர்ப்பம் அடைய அவர்கள் ஏதேனும் முயற்சி எடுத்துள்ளார்களா? என்று விசாரித்தபோது தாங்கள் அதுபோன்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் பதில் கூறினர். பின் எப்படி கர்ப்பம் அடைந்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில் மதத்தலைவர்கள் இந்த கன்னியின் கர்ப்பங்கள் குறித்து கூறும்போது சில பெண்கள் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தாங்கள் இன்னும் கன்னியாக இருப்பதாக கருதுகின்றனர் என்றும் இதுபோன்று உள்ள பெண்களூக்கு செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறுவயதிலேயே கர்ப்பம் அடைவதையும், திருமணத்திற்கு முன்னர் குழந்தை பெறுவதால் உள்ள ஆபத்தையும் எடுத்து கூற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்(TP)
0 Comments:
Post a Comment