20 Jan 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் 60000 க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றனர்

SHARE
(சக்தி)

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி உரையாற்றுகையில் மாற்றுத்திறனாளிகள் எவரும் இயலாமை  என்ற கருத்துக்கு இடமளிக்கக் கூடாது, மட்டக்களப்பு மாவட்டத்தில் 60000 க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றனர். 

சர்வதேச மற்றுத் திறனாளிகள் தினம் வாழ்வகம் அமைப்பினால் கடந்த சனிக்கிழமை (18) அன்று மட்டு.வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இவ் விழாவில் நூற்றுக் கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

வாழ்வகம் அமைப்பின் தலைவர் புவிராஜசிங்கம் தலமையில் இடம் பெற்ற  இந் நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதியின் அமைப்பாளருமாகிய அருண்தம்பிமுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராசா வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிலங்க 

பெனார்ண்டோ, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில் 

மாற்றுத் திறனாளிகளில் பலர் ஏதோ ஒருவகையில் சுய தொழிலினை மேற்கொண்டு வருகின்றனர். இயலாமை என நினைத்துக் கொண்டு முடங்கிக் கிடக்கக் கூடாது. சில பெற்றார்கள் தங்களது பிள்ளைகள் மாற்றுத் திறனாளிகளாக காணப்பட்டால் அவர்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துக் கொள்கின்றனர். அப்பிள்ளைகளை இன்று பல பலநலன்புரி நிலையங்கள் நடாத்தப்படுகின்றன அவற்றில் கல்வி அடங்கலான பல விடயங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. இவற்றின் மூலம் அப்பிள்ளைகள் முன்னேறுவதற்குரிய வாய்ப்பு உண்டு எனவே பயப்படத் தேவையில்லை பெற்றார்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அருண் தம்பிமுத்து அவர்கள் 
இவ் அமைப்புக்கு நிரந்தர கட்டிடம் மொன்றினை அமைத்து தருவேன் என இவ்விடத்தில் உறுதியளிக்கின்றேன் , மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து விடயங்களும் சலுகைகள் அல்ல அது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், எனத் தெரிவித்த அவர் வெளிநாடுகளை விட இங்கு அவர்களுக்கான வசதிவாய்புக்கள் குறைவாக இருப்பதனால் எதிர் வரும் காலங்களில் அவற்றினை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மட்டு.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்குகையில்.
அராங்க சேவையை பெற்றுக் கொள்ளும்  பொது இடங்களில் மற்றுத் திறனாளிகள் வித்தியாசமான பார்வையில் புறக்கணிக்கப்பட்டு பல அசௌகரியங்களை எதிர் கொள்வதனை தற்போது அறிந்துள்ளேன். இனிவருங் காலங்களில் அவ்வாறான சப்பவங்கள் இடம் பெற்றால் எனக்கு உடன் நீங்கள் அறியத்தரவும் அவற்றுக்கு தகுந்த நடவடிக்கை உடன் எடுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் வேறு தனியான பாடசாலையில் கற்கும் பொழுது பலத்த உளத்தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் இதனை கருத்தில் கொண்டு ஏனையவர்களுடன் சேர்ந்து ஒரே பாடசாலையில் கல்வி கற்கக் கூடியவாய்பினை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்துவிடம்  வினையமாக கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்தினாளிகளை அங்கத்தவர்களாகக் கொண்ட வாழ்வகம் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வின் போது. வேட்சீட், குடை போன்ற அன்பளிப்பு பொருட்களும் வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.    







SHARE

Author: verified_user

0 Comments: