20 Jan 2014

“சிவன் கிட்ஸ் ஹோம்” பாலர் பாடசாலை திறப்பு விழா

SHARE
(சக்தி)
மட்டக்களப்பு-செட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலய பரிபாலன சபையினால் இன்று (20) “சிவன் கிட்ஸ் ஹோம்” எனும் பாலர் பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.நாகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண சகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.அமலநாதன், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவர் பொன்.செல்வநாயகம், மட்டக்களப்பு மாவட்ட மேலத்திக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மற்றும் பல கல்வியியலாளர்கள், பொதுமக்கள் சிறார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட  “சிவன் கிட்ஸ் ஹோம்”  பாலர் பாடசாலையினை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன், மாணவர் வரவு இடாப்பில் மாணவர்களின் பெயர்களை எழுதி கிழக்கு மாகாண சகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.அமலநாதன், அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

தனியார் கட்டடித்தில் இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்த பாலர் பாடசாலை சமயப் பணியோடு மட்டும் நின்று விடாது பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தியுள்ளதோடு மேலும் எதிர் காலத்தில் ஏனைய சமூகப்பணியிலும் தமது ஆலயம் ஈடுபடவுள்ளதாக செட்டிபாளையம் சிவன் ஆலய பரிபாலன சபையினர் இதன்போது தெரிவித்தனர். 

இதன்போது இலங்கை வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையினால் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு கதைப் புத்தங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு-செட்டிபாளையம் சிவன் ஆலயத்திற்கு உத்தியோக பூர்வ இணையத்தளம் ஒன்றினையும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், திறந்து வைத்தார். 




















SHARE

Author: verified_user

0 Comments: