19 Jan 2014

பாரீஸ் நகரத்தின் விமான நிலையத்தில் ஒருவர் 26 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்

SHARE
பாரீஸ் நகரத்தின் விமான நிலையத்தில் ஒருவர் 26 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இதுவரை பிடிபடாமல் இருந்த அவரை தற்போது பிரான்ஸ் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள  ஊhயசடநள னந புயரடடந என்ற விமானநிலையம் 24 மணிநேரமும் பிஸியாக இருக்கும். அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வர். ஆனால் ஒருவர் மட்டும் அங்கேயே வருடம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். ஒருவருடம்இ இரண்டு வருடம் அல்லஇ 26 வருடங்கள் விமானநிலையத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

விமான நிலையத்தின் கழிவறைஇ படிக்கட்டுக்களின் கீழ்ப்புறம்இ மற்றும் கார் பார்க்கிங் போன்ற இடங்களில் மாறி மாறி அவர் தங்கியுள்ளார். கிடைக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு பல வருடங்களாக விமானநிலையத்திலேயே தங்கியிருந்த அவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் பார்க்கிங்கில் நின்றிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்தபோது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவர் அதே விமானநிலையத்தில்தான் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்ததாக அவர் தெரிவித்ததே அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம்.

ஐளஅயëட ழோர என்ற பெயருடைய அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் கேட்கும் பல கேள்விகளுக்கு லுநளஇ ழெ மற்றும் ஐ னழn’வ மழெற” என்ற பதிலை மட்டுமே கூறுகிறார். அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பாரீஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: