16 Oct 2012

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மட்டக்ளப்பு கிளையின் முதலுதவி பயிற்சி

SHARE
மட்டக்களப்பு-படுவன்கரை பகுதியான போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராம மக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவினூடாக முதலுதவி பயிற்சியினை வழங்கியிருந்தது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் மேற்படி சங்கத்திடம் விடுத்த கோரிக்கைக் கமைவாக இப்பயிற்சி நெறி நடைபெற்றது.
கடந்த 2012.10.11 ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சிநெறி 2012.10.14. ஆம் திகதியுடன்; நிறைவு பெற்றது
போரதீவுப்பற்று பிரதேசத்தில் அடிக்கடி காட்டு யானைகளின் தாக்கங்களுக்கும், மினி சூறாவெளித் தாக்கங்களுக்கும் உட்பட்டுவரும் மாலையர்கட்டு, கண்ணபுரம் கிழக்கு, ஆகிய கிராமமக்களுக்கே இம்முதலுதவி பயிச்சிநெறிகள் நடைபெற்றன.
இன்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் த.வசந்தராஜா, முதலுதவிப் போதனாசிரியர் வி.ஜீவரெத்தினம், சங்கத்தின் போரதீவப்பற்று தலைவர் மற்றும் உபதலைவர் ம.கலாவதி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கிராமங்களிலிருந்து மக்கள் வைத்திய உதவியினைப் பெறவேண்டுமாக இருந்தால் எழுவான்கரை பகுதில் அமைந்திருக்கும் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, கல்முனை,போன்ற பிரதேசங்களுக்கே செல்வது வழக்கமாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: