27 Sept 2012

அம்பாரை மாவட்டத்தில் சமூக நல்லாட்சி ஊடான உட்கட்டுமான வேலைத்திட்டம்

SHARE

பாம் நிறுவனம்;; அம்பாரை மாவட்டத்தில்  சமூக நல்லாட்சி ஊடான உட்கட்டுமான வேலைத்திட்டம்  எனும் தொணிப்பொருளின் கீழ் உள்ளுராட்சி மற்றங்களுடன் பல லேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அவற்றுள் அம்பாரை - நாவிதன்வெளி பிரதேச சபையினூடாக மேற்படி அமைப்பு தாங்கள் மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்கள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்று (26.09.2012) திருகோணமலை உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்து.
இன்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராச்சி ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண உள்ளுராச்சி நிணைக்களத்தின் பொறியலாளர் திருமதி எல்.சித்திராதேவி, நாவிதன் வெளி பிரதேச சபையின் செயலாளர் ம.ராமக்குட்டி,  பாம் பவுண்டேசன் நிறுகனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் சி.பாஸ்கரன், ஐரோhப்பிய ஒன்றியத்தின் பிரந்திய பொறியிலாளர் அசோக்கா அஜந்த நாவிதன் வெளி பிரதேச சபையின் முகாமைத்துவ உத்தியோகஸ்தர் வி.யோகேஸ்வரன்,உள்ளுராட்சி உதவியாளர் ஐ.எம்,போல், கிரம அபிவிருத்தி திட்ட உதவியாளர்களான ரி.எம்.பெனடிக், வி.கார்திகோசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது பாம் பவுண்டேசன் நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: