1 Oct 2012

கிழக்கில் பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தார்களா?

SHARE


கிழக்கு மாகாகண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை தமிழருக்கு வழங்கியது வரவேற்கத்தக்கது ஆனால் பொறுப்பு வாய்ந்த பதவியொன்று தமழர்களுக்கு இம்முறை வழங்கப்படாமை கவலைக்குரியது என தேசிய சுதந்திர முன்னணி சார்பில் கிழக்கு மாகாண சபைக்குத் தரிவாகியுள்ள ஜெயந்த விஜயசேகர கவலை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் இம்முறை தமிழர்கள் எவரும் பதவிகளுக்கு நியமிக்கப்படாமை குறித்து கேட்போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

மாகாண சபையில் பொறுப்பு வாய்ந்த பதவியொன்று தமிழருக்கு வழங்கப்படுமானால் அது காலத்துக்கேற்ற செயலாக அமையும் ஆனால் அப்படியொன்றும் இதுவரை வழங்கப்படவில்லை. குறைந்தது சபை பிரதித் தவிசாளர் பதவியாவது தமிழருக்கு வழங்கப்பட்டால் இந்த நேரத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கும்.

கிழக்கில் பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தார்களா? இல்லையா? என்று அல்லாமல் தமிழ் மக்களின் ஒத்துளைப்பு மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டும் இதற்கு நல்ல வேலைத் திட்டங்கள் தேவை. இந்த வேலைத் திட்டங்கள்; இருக்குமானால்தான் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும் அது மட்டுமின்றி அரசாங்கம் சர்வதேச ரீதயில் எதிர்நோக்கும் அழுத்தங்களிலிருந்தும் விடுபட முடியும்.

அரசாங்கம் பல்வேற உபாயங்களைப் பாவித்து ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட முடிந்துள்ள போதிலும் சிறுபாண்மை இன மக்களை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டம் எதுவும் அரசிடம் இல்லையென்பதையே கிழக்கு மாகாண தேர்தலி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

வவுனியா “மனிக் பாம்” இடம்பெயர்ந்தோருக்கான முகாம் அண்மையில் மூடப்பட்டது இதனையடுத்து சகல முகாம்களும் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இதனை ஏற்க முடியாது.

குச்சவெளி பாடசாலைக்கு அருகாமையில் சுமார் 60 குடும்பங்களும் சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்களும் இன்னமும் மீள்குடியேற்றமின்றி தற்காலிக முகாம்களில் உள்ளன.

விசேடமாக சம்பூர் அனல் மின்நிலையத்திற்கு தேவையான காணியை மட்டும் அரசாங்கம் சுபிகரித்துவிட்டு மிகுதிக் காணியில் அவர்களின் மீள்குடியேற்றம் குpறத்து கவனம் செலுத்த வேண்டும். சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவது பிரச்சினையாக அமையுமானால் அருகாமையில் அந்த வாயப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு தனி நாடு தேவைப்பட்டிருக்கலாம் சில தமிழ் தலைவர்கள் அதை கோரலாம் ஆனால் சம்பூர் பிரதேச மக்கள் தனிநாடு கேட்கவில்லை.

அவர்கள் கேட்பது குடியிருக்க வீடும் நிலமும், பயிர்செய்கைக்கு காணி, நிர்ப்பாசனத்திற்கு குளம் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பாடசாலை இதனைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவு நிவாரணம் கூட இப்போ நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியுள்ள தற்காலிக கூடாரங்கள் கூட புனரமைக்கப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் பருவமழை ஆரம்பமாகிவிடும் அவ்வேளை அந்த மக்கள் கஷ்டங்களை எதிரிநோக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: