3 Jul 2023

தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - பிரசாந்தன்.

SHARE

தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - பிரசாந்தன்.

தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எமது கட்சியின் தலைவர்  தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் கடனை மறுசீரமைப்பு தொழிலாளர்களின் சேமலாப நிதியில் வைக்கப் போவதில்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெளிவு படுத்தியுள்ளார்.

உள்ளூர் கடன் மறு சீரமைப்பு திட்டமானது பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே அது நடைமுறை படுத்தப்படும். நாட்டில் பொருளாதார நெருக்கடி சீரமைக்கப்பட்டு, நிலைபேறான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும். அதேவேளை தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கோ அவர்களின் நிதியை கையாளுவதற்கு எமது கட்சி ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இது ஒரு முக்கியமான திட்டம் ஆகும்.

மதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பு.+பிரசாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில்  கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை(30.06.2026) ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

இருப்பினும் தொழிலாளர்களின் சேம லாப நிதியில் கை வைப்பது முறையற்றது தொழிலாளர்களின் நிதியினை சுரண்டி நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது. அதே வேளை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதேவேளை நாட்டின் கடனை மறுசீரமைப்பதும் தேவையானது என்பதிலும் நாட்டின் பொருளாதார நிலையினை மேம்படுத்த  வேண்டிய தேவையுள்ளதாகவும் யாரும் மறுக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களிலேயே கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னெடுப்புக்கள் எவ்வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது. என்ற பூரணமான அறிக்கை கிடைக்கும் என நினைக்கின்றேன். அதனை ஆராய்ந்து எமது கட்சியின் தலைவர்  சி.சந்திரகாந்தன் அவர்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பார். என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: