24 Apr 2023

ஆளுனரின் நடவடிக்கை மிகவும் மோசமாகவுள்ளது - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

ஆளுனரின் நடவடிக்கை மிகவும் மோசமாகவுள்ளது - இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன்.

கிழக்கு மாகாண ஆளுனர் எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்;க்கட்சியில் இருப்பவர்களுக்கு அரசியல் செய்வதற்கு இலகுவாக அமையும். எம்மைப் பொறுத்தவரையில் ஆளுனரின் நடவடிக்கை மிகவும் மோசமாகவுள்ளது. கள நிலவரங்களைப் பார்க்காமல் முடிவுகளை எடுக்கக்கூடாது. சில அரச உத்தியோகஸ்த்தர்கள் தாங்கள் பெறும் வேதனைத்தில் பெற்ற கடன்களைக் கழித்துவிட்டு மாதாந்தம் 258 ரூபாவும் பெறுகின்றார்கள்.

என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 20.04.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மேற்படி இராஜாங்க அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

எமக்கு உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மறுகண். இரண்டும் எமக்கும் தேவை என்பதால்தான் இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டு செல்கின்றோம். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிலும், இப்பகுதி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை மக்கள் பிரதிநிதிகளான நாங்களும், அரச திணைக்களங்களும் ஒன்றிணைந்து முன்நெடுக்க வேண்டும். எனவே அனைத்து திணைக்கள தலைவர்களும், இப்பகுதி மக்களுக்கு என்ன வகையான வேலைத்திட்டங்களை இவ்வருடத்தில் மேற்கொள்ளவுள்ளீர்கள் எனும் திட்டமிடலை எதிர்வரும் மே மாதம் மூன்றாம் வாரத்திற்கு முன்னர் பிரதேச செயலாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அது இவ்வருட இறுதியில் என்ன அடைவு மட்டத்தை அடைந்துள்ளோம் என்பதை நாம் இதனுடாக அவதானிக்க முடியும்.

நிதிக்குழுக்களின் கருத்துக்களுக்கு அமைய ஆளுனர் இப்பகுதி மக்களின் நிலமையை அறியாமல் சில முடிவுகளை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றபோது அதன் பாதிப்புக்களை எமது மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள்கூட அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே மண்டூர் - குருமண்வெளி, அம்பிளாந்துறைகுருக்கள்மடம், ஆகிய படகுப் பாதைப் போக்குவரத்திற்காக தற்போது மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒருவரிடம் 50 ரூபாய் அறவீடு செய்யப்படுகின்றது. இது தற்காலத்தில் பொருத்தமில்லாத விடையமாகும். எனவே பாடசாலை மணவர்கள், பிரத்தியேக கல்வி கற்கும் மாணவர்கள், ஏனை தொழில் நுட்பக் கல்லாரியில் கற்பவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் இலவசமாக பயணம் செய்வதற்கும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் 10 ரூபாய் மாத்திரம் அறவீடு செய்ய வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுனர் எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்;க்கட்சியில் இருப்பவர்களுக்கு அரசியல் செய்வதற்கு இலகுவாக அமையும். எம்மைப் பொறுத்தவரையில் ஆளுனரின் நடவடிக்கை மிகவும் மோசமாகவுள்ளது. கள நிலவரங்களைப் பார்க்காமல் முடிவுகளை எடுக்கக்கூடாது. சில அரச உத்தியோகஸ்த்தர்கள் தாங்கள் பெறும் வேதனைத்தில் பெற்ற கடன்களைக் கழித்துவிட்டு மாதாந்தம் 258 ரூபாவும் பெறுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் மேலதிகளமாக உள்ளதாக மாகாண கல்வித்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய ரீதியில் பார்க்கின்றபோது கிழக்கில் ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளதாக காட்டப்படுகின்றது. ஆனால் கிழக்கில் இன்னும் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்குரிய ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் காணப்படுகின்றன. 300 இற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் கல்குடா வலயத்தில் உள்ளன. இதன் காரணமாக கல்வியற் கல்லூரியிலிருந்து அண்மையில் நியமனம் பெறவுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை அனைவரையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே நியமிக்குமாறு நான் கல்வியமைச்சரிடம் கேட்டுள்ளேன்.

அதுபோல் சுத்தமான குடிநீர் வழங்குகின்ற வீதம் மட்டக்களப்பு மாட்டம் குறைவாகவுள்ளது. தாய்ப்பாலுக்கு நிகரான பசுப்பால் ஒரு லீற்றர் 110 ரூபாவும், தண்ணீர் ஒரு லீற்றர் 160 தொடக்கம் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு நாளைக்கு மட்டக்களப்புக்கு 3 கோடியே 20 இலெட்டசம் தண்ணீர் வழங்கப்படுகின்றது. 80 இலெட்சம் லீற்றர் நீர் சேமிப்பிலிருக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: