24 Apr 2023

பயங்கரவாத புதிய சட்டத்தால் தமிழ் மக்கள் மென்மலும் பல கஷ்ற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் - நகுலேஸ்.

SHARE

பயங்கரவாத புதிய சட்டத்தால் தமிழ் மக்கள் மென்மலும் பல கஷ்ற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் - நகுலேஸ்.

இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் வடகிழக்கில் வர்கின்ற தமிழ் மக்கள் மென்மலும் பல கஷ்ற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். தொலைபேசி, இணையத்தளங்களை முடக்குதல், தனி நபர்களைக் கைது செய்தல் போன்றனவெல்லாம் அதில் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி இது முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களும் இதில்; பாதிக்கப்படுவார்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதி பயங்கரவாத எதிப்புச் சட்டம் ஒன்றை புதிதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக 25 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களும். தங்களது வர்த்தக நிலையங்களை மூடி இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ஜனநாயக் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.நகுலேஸ் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை(23) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் இவ்விடையம் தொடர்பிலான துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வினியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

ஏற்கனவே இலங்கையில் நடைமுறையிலிருக்கின்ற பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றீடாக இலங்கை அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்ட வருகின்றது. இது தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்தைவிடவும் மிகவும் இறுக்கமான சட்டமாகக் காணப்படுகின்றது. புதிய சட்டத்தில் இராணுவம், மற்றும் பொலிசாருக்கு முழு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் வடகிழக்கில் வர்கின்ற தமிழ் மக்கள் மென்மலும் பல கஷ்ற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். தொலைபேசி, இணையத்தளங்களை முடக்குதல், தனி நபர்களைக் கைது செய்தல் போன்றனவெல்லாம் அதில் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி இது முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களும் இதில்; பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறான சட்டங்களைப் பயன்படுத்தியே தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கல்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனை தமிழ் மக்களாகிய நாம் எதிர்க்க முடியாத நிலையில் அரசு இதனைக் கொண்டு வருகிறது.

எனவே இச்சட்டம் நடைமுறையில் வருவதற்கு அனைத்து இன மக்களும் ஆதரிக்கக் கூடாது. இதற்காகவேண்டி எதிர்வரும் 25 ஆம் திகதி அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி கர்த்தால் அனுஸ்ட்டித்து தமது எதிர்ப்புக்களை அரசுக்கு காட்டுமாறு வேண்டுகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது களுவாஞ்சிகுடி நகர் பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக் நிலையங்கள், மற்றும், பிரயாணிகளுக்கும் இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் அவர்களார் வினியோகிக்கப்பட்டன.










SHARE

Author: verified_user

0 Comments: