30 Dec 2022

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபை அமர்வு வியாழக்கிழமை(29.12.2022) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. சபையின் புதிய தவிசாளர் சோ.சற்குணராசா தலைமையில் நடைபெற்ற இச்சபை அர்வில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டத்தின் அழைப்பிதழ் கடிதத்துடன் இணைத்து இப்பாதீடு தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவே இந்த பாதீட்டை நாம் ஆதரிக்கப் போதில்லை என உறுப்பினர்கள் தெரிவித்தனர். பின்னர் தவிசாளரின் அனுமதியுடன் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பாதீடு தயரித்த உத்தியோகஸ்த்தரும் சபைக்குச் சமர்ப்பித்த பாதீடு தொடர்பில் விளக்கமளித்தனர்.

பின்னர் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்களின் சிபார்சில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களுக்கு தலா 10 இலெட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும்  என சில உறுப்பினர்களும், வட்டார அடிப்பiயில் அந்த நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இன்னும் சில உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர். பின்னர் அதில் உறுப்பினர்களிடையே வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த வரவு செலவுத்திட்டத்தை தான் எதிர்ப்பதாகத் தெரிவித்து துறைநீலாவணை வட்டார உறுப்பினர் .சரவணமுத்து சபையிலிருந்து வெளியேறிச் சென்றார். பின்னர் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சம்மத்தித்ததன் அடிப்படையில் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்களின் சிபார்சில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தலா 10 இலெட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சபை முடியும் இறுதித் தருவாயில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் பிரேணை ஒன்றை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் ஒரு குழுவை நியமித்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும், என சில படுகொலைச் சம்பவங்களையும் சுட்டிக்காட்டி வாசித்ததோடு, அவ்வாறான செயல்களைச் செய்தவர்கள் தற்போதும் நடமாடித் திரிவதாகவும், இதற்கு சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கு சபையிலிருந்து சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததோடு, இன்னும் சில உறுப்பினர்கள் எதிராகவும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: