விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் பிரதீஸ்வரனுக்கு தேசபந்து விருது வழங்கி கௌரவம்.
மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பிலிருந்து இயங்கி வரும் விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய கௌரவ “தேசபந்து” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை(29.12.2022) அன்று மனித உரிமை அமைப்பு ஒன்று கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து நடாத்திய விருது வழங்கும் விழாவின்போது பிரதீஸ்வரனுக்கும் சிறந்த சமூக சேவைக்காக இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிலுப்பிலிருந்து இயங்கி வரும் விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியில் படசாலைக் கல்வியை முடித்த மாணவர்கள் தொழில்க் கல்வியைப் பயின்று வருதுடன், அக்கல்லூரியினுடாக பல்வேறுபட்ட சமூகப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment