1 Nov 2022

தற்போதைய நெருக்கடியில் மாணவர் வருகை 50 வீதமாக குறைவடைந்துள்ளது - வாகரை பிரதேச செயலாளர் அருணன்.

SHARE

தற்போதைய நெருக்கடியில் மாணவர் வருகை 50 வீதமாக குறைவடைந்துள்ளது. தாய்மார் வெளிநாடு செல்வதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.- வாகரை பிரதேச செயலாளர் அருணன்.

தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி  காரணமாக வாகரைப் பிரதேச மாணவர் வருகை 50 சத வீதமாகக் காணப்படுவதோடு மாணவர் இடைவிலகலும் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் ஜி. அருணன் தெரிவித்தார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக அபிவிருத்தி அமுலாக்கத் திட்டத்தின் வெளிப்படுத்துகை பிரதேச மட்ட நிகழ்வு வாகரை கலாசார மத்திய நிலையத்தில் திங்கள்கிழமை 31.10.2022 இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச சிறுவர் சபை, மகளிர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வெளிப்படுத்துகை அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அங்கு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அருணன்,

எமது பிரதேச செயலகப் பிரிவிலிருந்து அநேகமான தாய்மார் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவணர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது.

இது போன்ற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக எம்மால் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரப் பிரச்சினைக்கும் போஷாக்குப் பிரச்சினைக்கும் எம்மால் இயலுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இளைஞர் அபிவிருத்தி அகம், வேர்ள்ட் விஷன் போன்ற தன்னார்வத் தொண்டர் அமைப்புக்களின் சேவைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எனவே பிள்ளைகளைக் கட்டாயம் பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோரும் பாதுகாவவலர்களும் முயற்சிக்க வேண்டும்.” என்றார்.

வாகரைப் பிரதேச உதவிச் செயலாளர் ஜி. பிரணவன், கல்குடா கல்வி வலய முறைசாரக்  கல்வி உத்தியோகத்தர் என். சதார்த்தனன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. கலைவாணி, மகளிர் அபிவிருத்தி அலுவலர் கே. நவநிதனி உள்ளிட்டோரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவன அலுவலர்களும் வாகரைப் பிரதேச சிறுவர் சபை, மகளிர் அமைப்புக்கள், சிரேஷ்ட பிரஜைகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறுவர்களுக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அன்பளிப்புக்களும் ஆக்கச் செயல்பாட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), நிறுவனம் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக அபிவிருத்தி அமுலாக்கத் திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்குகின்றது. 

Author: verified_user

0 Comments: