4 Oct 2022

வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு.

SHARE

வெல்லாவெளி கலைமகள்  மகா வித்தியாலயத்தில்  சிறுவர் முதியோர் தின நிகழ்வு.

வெல்லாவெளி கலைமகள்  மகா வித்தியாலயத்தில்  சிறுவர் முதியோர் தின நிகழ்வு  பாடசாலை  அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி, கோட்ட கல்வி அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் நன்நடத்தை அதிகாரி, உதவி பிரதேச செயலாளர், பிரதி  திட்டமீடல் பணிப்பாளர், கலந்து கொண்டிருந்தனர்நிகழ்வு 3 எடுத்த மாணவர்கள் மாவட்ட மட்டத்தில்  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை  பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது கோட்டகல்வி  அதிகாரி அருள்ராசா போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் கிராம முன்னேற்ற சங்க தலைவர் கோகுலதாஸ் மற்றும் ஆசியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவற்றில் சிறுவர்கள் முதியோர்கள் கௌரவிக்ப்பட்டு பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: