17 Oct 2022

காட்டுயானையின் பிடியிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்.

SHARE

காட்டுயானையின் பிடியிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்புக்குட்பட்ட போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் விழாந்தோட்டம், கண்ணபுரம் கிழக்கு ஆகிய கிராமங்களுக்குள் ஞாயிற்றுக்கிழமை(16) அதிகாலை ஒரு மணியளவில் உட்புகுந்த காட்டுயானைகள்  அங்கிருந்த வாழை, தென்னை, உள்ளிட்ட பயன்தரும் மரங்களை அழித்துள்ளதுடன், மக்கள் குடியிருக்கும் வீடுகளையும் உடைத்து பொருட்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானைகளை விரட்டுவதற்கு மக்கள் மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர், தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசுகள் கொடுத்தியும், கானைகள் செல்லவில்லை. ஆனாலும் கண்ணபுரம் கிழக்கு கிராமத்திலுள்ள வீடொன்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கீருந்த நெல் மூட்டைகளையும் இழுத்துச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கினறனர்.

இந்நிலையில் விளாந்தோட்டம் கிராமத்தில் புகுந்த காட்டுயானைகள் வயது முதிந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது பேரப்பிள்ளையும் இருந்துள்ளார்கள், அவர்களின் வீட்டை உடைத்து வீட்டின் சுவரையும் இடித்துவிட்டுச் சென்றுள்ளது. சுவர் இடிந்த விழுந்ததில் அவர்கள் மயிரிழையில் உயிர் பிழைத்ததாகத் தெரிவிக்கின்றனர்.

எனினும் யானைகள் ஒருவாறு அதிகாலை இரண்டு மியளவில் கிராமங்களை விட்டு நகர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகயும், அதிகரித்த வண்ணமுள்ளன. அப்பகுதி மக்கள் இரவும் பகலும் தொடற்சியாக கண்விழித்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, அப்பகுதி மாணவர்களின் கல்வி, மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களும் மிக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அப்பகுதி பற்றைக் காடுகளில் தங்கி நிற்கும் காட்டு யாளைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்துக் கொண்டு சரணாலயங்களில்விட வேண்டும் என்பதுவே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: