16 Oct 2022

மட்டக்களப்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற அருந்ததியின் "மாற்று மோதிரம்" நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!

SHARE


திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்திவருகின்ற அருந்ததி நிறுவனம் நேற்றைய தினம் (15) திகதி மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் "மாற்று மோதிரம்" எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை மிகப்பிரமாண்டமாக நடாத்தியிருந்தது.அருந்ததி நிறுவனத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தலைமையில் நடைபெற்ற  "மாற்று மோதிரம்" கண்காட்சிக்கு பிரதம அதிதிகளாக புத்தகப் புரவலர் காசீம் உமர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக தினகரன், வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர்,  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன்,  இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் பாராளுமன்ற செயலாளர் ரீ.ஈஸ்வரராஜா, புதிய ஐனநாயக முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார், அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள இத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட இக்கண்காட்சியில் கேக் கண்காட்சி, மணப்பெண் அலங்காரக் கண்காட்சி, திருமண சேவை, கொட்டுமேளக் காட்சி, மாற்றுமோதிர காட்சிகள் மேடையேற்றப்பட்டதுடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் "அருந்ததி" பத்திரிகை அறிமுகமும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கிழக்கு மாகாணத்திலுள்ள கேக், மணப்பெண், உள்ளிட்ட வடிவமைப்பாளர்களர் பங்கு கொண்டதுடன், அவர்களின் இத்தொழில் ரீதியான ஆலோசனைகளும், அதுதொடர்பான வியாபார யுக்திகளும், வியாபாரத்திற்குரிய வர்த்தக இணைப்புக்களும் மேற்ககொள்ளப்பட்டதுடன், இதன்போது கேக் வடிவமைப்பாளர்கள், அழகுக்கலை நிபுணர்களது திறமைகளை பாராட்டி  உயரிய விருதுகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் என்பன அதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு அனுசரனையாளர்களாகவும், அதிதிகளாகவும் கலந்துகொண்டவர்களை நிகழ்வின் ஏற்பாட்டாளரான கந்தசாமி கருணாகரன் மற்றும் அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.























SHARE

Author: verified_user

0 Comments: