5 Sept 2022

156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரால் நடாத்தப்பட்ட கிறிக்கட் போட்டி.

SHARE

156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரால் நடாத்தப்பட்ட கிறிக்கட் போட்டி.

இலங்கையின் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களபப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிக்கட் விளையாட்டுப் போட்டி ஞயிற்றுக்கிழமை(04) மாலை களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது களுவாஞ்சிகுடி வாஞ்சி விளையாட்டுக்கழகம், பொலிஸ் அணி, விசேட அதிரடிப்படை அணி, மற்றும் பட்டாபுரம் லக்கி ஸ்றார் விளையாட்டுக்கழகம் என்பன விளையாடினர். 5 ஓவர்களையும், அணிக்கு 8 பேரையும் கொண்ட இப்போட்டியில், முதலில் களுவாஞ்சிகுடி வாஞ்சி விளையாட்டுக் கழகத்திற்கும், பட்டாபுரம் லக்கிஸ்றார் விளையாட்டுக்கழகமும் விளையாடியத்தில் பட்டாபுரம் லக்கிஸ்றார் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. பின்னர் பொலிஸ் அணியும், விசேட அதிரடிப்படை அணியும் விளையாடியிருந்தது. அதில் பொலிஸ் அணி வெற்றிபெற்றிருந்தது.

இறுதிப்போட்டியில் பொலிஸ் அணியும், பட்டாபுரம் லக்கி ஸ்றார் அணியும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்து ஆடிய பொலிஸ் நிலைய அணி ஐந்து ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றதுடன், பொலிஸ் நிலைய அணி சார்பாக ஜெயவிக்கிரம அதிகபட்சமாக 14 ஓட்டங்களை குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய பட்டாபுரம் லக்கி ஸ்ரார் அணி 4.2 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கட்டுகள் வித்தியாசத்தில் பொலிஸ் அணியைத் தேற்கடித்து வெற்றிபெற்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபயவிக்கிரவின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன், இவ்விளையாட்டு விழாவானது பொலிசாருக்கும், மக்களுக்குமிடையில் நல்லுறவை எற்படுத்தியுள்ளதாக இவ்விளையாட்டைப் பார்வையிட வந்திருந்த மக்கள் தெரிவித்தனர்.























SHARE

Author: verified_user

0 Comments: