16 Sept 2022

110 லீற்றர் டீசல் எங்கே? சபையில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள்

SHARE

110 லீற்றர் டீசல் எங்கேசபையில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 55 வது அமர்வது சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் வியாழக்கிழமை(15) நடைபெற்றதுஇதன்போது சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரின் இடமாற்றுவது தொடர்பில் கடந்த மாத அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம்சபையின் உப தவிசாளர் தனிப்பட்ட விடையம் காரணமாக வெளிநாடு சென்றதன் காரணமாக தற்காலிகாலிக உபதவிசாரைத் தெரிவு செய்தமைசபைக்குச் சொந்தமான எரிபொருள் காணாமல் போயுள்ளவிடையம் உள்ளிட்ட பல விடைங்கள் தொடர்பில் பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் தனது சொந்த விடையம் காரணமாக சபையின் தவிசாளருக்கு அறிவித்துவிட்டு வெளிநாடு சென்றதாகவும்அதற்கு இடையில் தற்காலிக உபதவிசாளர் ஒருவரை சபை உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளதாகவும்இது சட்டத்திற்கு முரணாணதுஇதனை தான் வன்மையாக கண்டிப்பதாக உபதவிசாளர் திருமதி..ரஞ்சினி தெரிவித்தார்.

இதனிடையே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரை இடமாற்றுவதற்கு ஆர்பாட்டம் மேற்கொள்ள வேண்டும் என மே.வினோராஜ் கருத்தை முன்வைத்தார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாம் தயார் இல்லை அதற்கு ஆதரவு வழங்க முன்வரமாட்டோம் என உபதவிசாளர் திருமதி..ரஞ்சினிமற்றும் உறுப்பினர்களான காண்டீபன்இரவீந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்சில உறுப்பினர்கள் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார்கள்மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரை இடம்மாற்றுவது தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதில் கிடைத்ததும் மேற்கொண்டு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இச்சபை அமர்வின்போது பிரதேசத்திற்குட்பட்ட வடிகான்களைத் துப்பரவு செய்தல்நூலகங்களுக்கு வாசகர் வட்டங்களை இஸ்தாபித்தல்சுகாதார வேலைகளைத் துரிதப்படுத்தல்நூலகங்களிலிருந்து வெளியில் இரவல் வழங்கி இதுவரையில் மீளப்பெறாத புத்தகங்களுக்குப் பதிலாக உரிய நூலகரிகளிடமிருந்து அதற்குரிய புதிய நூல்களைக் கொள்வனவு செய்தல், 1985 ஆம் ஆண்டிலிருந்து சபைக்குச் சொந்தமான கட்டடங்களின் வாடகைப் பணம் நிலுவையாக அறவிடமுடியாமல் உள்ளதனால் அதனை அறவிடமுடியாத கடன்களாகக் கழித்தல்,  வைப்பு பணத்திலுள்ள காசை வருமான த்திற்கு மாற்றுதல்பிரதேசத்தின் குருக்கள்மடம் எல்லையைத் தீர்மானித்துத் தருமாறு உரிய திணைக்களத்திற்கு கடித்தம் அனுப்புதல்வாழ்வாதார செயற்பாடுகளை துரித்தப்படுத்துதல்சபைக்குச் சொந்தமான களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் அமைந்துள்ள கடை ஒன்றில் அண்மையில் மின்னொழுக்கக் காரணமாக எரிந்துதுள்ளது அக்கடை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்குதல்சபைக்குச் சொந்தமான 110 லீற்றர் டீசல் காணாமல் போயுள்ளது அதுதொடர்பில் விசாரணைகளை முன்நெடுத்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.

 

 











SHARE

Author: verified_user

0 Comments: