16 Sept 2022

ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகம் நடாத்திய சர்வதேச பேச்சு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சம்மாந்துறையில் பாராட்டு !

SHARE

ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகம் நடாத்திய சர்வதேச பேச்சு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சம்மாந்துறையில் பாராட்டு !

ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகம் நடாத்திய சர்வதேச பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாய் நாட்டுக்கு பெருமை ஈட்டிய சம்மாந்துறையை சேர்ந்த  மாணவிகளை சம்மாந்துறை பிரதேச சபையினால்  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (13) இடம்பெற்றது.

இப்போட்டியில் கனிஸ்ட நிலை பிரிவில் மூன்றாம் இடத்தை அல் - அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் ஜலீல் பாத்திமா மின்ஹா மற்றும் இடை நிலை பிரிவில் மூன்றாம் இடத்தை அல் -மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் அலியார் றாசிதா பர்வின் ஆகிய இரு மாணவிகளுக்கும் சம்மாந்துறை பிரதேச சபையினால் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சி முகம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம். ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், அல் - அர்ஷத் மகா வித்தியாலய அதிபர் எம்.அப்துல் றஹீம், அல் -மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எஸ்.சுஜானா, ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.ஜிப்ரி, எம்.எஸ்.சரீபா ஆகியோர்களினால் தனிப்பட்ட முறையில் இம்மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: