7 Jun 2022

உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள அவசர அவசிய உணவு உற்பத்திக்கு ஊக்கமளிப்பு.

SHARE

உணவுப் பஞ்சத்தை  எதிர்கொள்ள அவசர அவசிய உணவு உற்பத்திக்கு ஊக்கமளிப்பு.

எதிர்வரும் சில மாதங்களில் நம்மை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்வு கூறப்படும் உணவுப் பஞ்சத்தை  எதிர்கொள்ள, விவசாயத் திணைக்களத்தினால் அவசர அவசிய உணவு உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருவதாக  மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் தெரிவித்தார்.

ஏற்படப் போகும் உணவுப் பஞ்சத்தை  எதிர்கொள்ள வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு அவசர அவசிய உணவு உற்பத்திக்காக  ஊக்கமளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் ஐயன்கேணியில் ஞாயிறன்று 05.06.2022 இடம்பெற்றது.

நிகழ்வில் கிராம வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தினால் அரை மானிய அடிப்படையில் சிறந்த ரக மிளகாய், கொடிப்பயற்றை, பீர்க்கு, வெண்டி ஆகிய நால்வகை மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய உதவிப் பணிப்பாளர் சித்திரவேல் உணவுப் பஞ்சத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராகின்ற அதேவேளை போஷாக்கைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். பட்டினிக் காலத்iதில் இளம் பராயத்தினரைப் பாதுகாப்பதற்கு போஷாக்கு முக்கியம். ஒவ்வொருத்தரும் தங்களது வீடுகளிலுள்ள வீட்;டுத் தோட்டங்களிலே  போஷாக்கான உணவு உற்பத்திகளை மேற்கொள்ள முடியும்என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் எம்.. தஸ்லிம் உட்பட விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிதாரணி பிறேம்ரூபன் உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: