26 May 2022

மண்ணை மேயும் மனம், பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீடு.

SHARE

மண்ணை மேயும் மனம், பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீடு.

மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும், ஆசிரியருமான வைரமுத்து துசாந்தன் எழுதிய மண்ணை மேயும் மனம் எனும் கவிதைத் தொகுதி மற்றும்பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள்  எனும் பத்தி எழுத்து கட்டுரை தொகுதி, ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் கடந்த 21.05.2022 அன்று முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கவிஞர் .மேகராசா(மேரா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி, அவர்கள் பிரதம அதிதியாகக் காலந்து கொண்டிடிருந்தார்.

இதன்போது வரவேற்புரையை கவிஞர் சோலையூர் .தனுஸ்கரன் அவர்களும், “பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள்  எனும் பத்தி எழுத்து கட்டுரை தொகுதியின் மதிப்பீட்டு உரையை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறை மேனாள் தலைவர் பேராசிரியர் அவர்களும், “மண்ணை மேயும் மனம்எனும் கவிதைத் தொகுதி நூலின் மதிப்பீட்டுரையை கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளர் .மோகனதாசன் அவர்களும், ஏற்புரையை நூலாசிரியர் .துசாந்தன் அவர்களும், நன்றி உரையை பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளர் .தேகதாஸ்  அவர்களும், நிகழ்த்தினர்.

நூல்களின் முதற் பிரதிளை குணா மல்டிசொப் உரிமையாளர் சா.குணகேகரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  இந்நிகழ்வில் எழுத்தாளர் புரவல் மூ.அருளம்பலம், மற்றும் கவிஞர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் நிருவாகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுயாதீன ஊடகவியலாளரும், ஆசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து துசாந்தனின் இலக்கிய நோக்கைக் கருத்திற் கொண்டு பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.











SHARE

Author: verified_user

0 Comments: