1 Jan 2022

மக்களின் ஆதரவுடன் இவ்வருடமும் மாவட்டத்தில் தடைகளின்றி அபிவிருத்திப் பணிகள் தொடரும்.

SHARE

(ரகு) 

மக்களின் ஆதரவுடன் இவ்வருடமும் மாவட்டத்தில் தடைகளின்றி அபிவிருத்திப் பணிகள் தொடரும்.

கிராமிய மட்டத்தில் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களின் ஒத்துழைப்புக்களுடன் இதுவரையில் முன்கொண்டு செல்லப்பட்ட அபிவிருத்திப் பணிகளைப் போன்று இவ்வருடமும் அதன் தொடற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக என்னால் முடிந்தவரை அரசாங்கத்தைப் பயன்படுத்தி வேண்டிய அபிவிருத்திப் பணிகளை கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வேன். என ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் .சந்திரகுமார் தெரிவித்தார்.

பிறந்துள்ள 2022ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக ஸ்ரீ லங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜனப்பெரமுன மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு சுபிட்சமிகு எதிர்காலத்திற்கான பயணத்தில் ஓரணியில் திரள்வோம் எனும் தொணிப்பொருளின் கீழ் சனிக்கிழமை(01.01.2022) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது பங்கேற்றிருந்தனர். இதன்போது கலந்து கொண்டிருந்தவர்களட பரஸ்பர புத்தாண்டு வாழத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இதன்போது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்தொடர்ந்து தற்போதைய அரசாங்கத்தினால் மாட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. 

மேலும் இந்த ஆண்டில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன. மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய காலத்தில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் இதுவரையில் தனது தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் உழமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதுபோல் இவ்வருடமும் அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன்.

கிராமிய மட்டத்தில் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களின் ஒத்துழைப்புக்களுடன் இதுவரையில் முன்கொண்டு செல்லப்பட்ட அபிவிருத்திப் பணிகளையப் போன்று இவ்வருடமும் அதன் தொடற்சிகளை மேற்கொள்ள வேண்டும். என்னால் முடிந்தவரை இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி வேண்டிய அபிவிருத்திப் பணிகளை கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன்; மேற்கொள்வேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.                









SHARE

Author: verified_user

0 Comments: