30 Oct 2021

முஸ்லீம் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வு.

SHARE

முஸ்லீம் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வு தன்னாமுனை மியானி மண்டபத்தில் கோவிட் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி  சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நாவலடி, ஓட்டமாவடி, ஓட்டமாவடி மத்தி, ஏறாவூர் நகர், மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி, ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களை சேர்ந்த பல்கலை கழக மாணவிகள், மகளீர் சங்க உறுப்பினர்கள், முஸ்லீம் காதி நீதிமன்ற பணியாளர்கள், முன் பள்ளி ஆசிரியர்கள்,  மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்  என்போர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விழிப்புணர்வு நிகழ்வானது  1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்க முஸ்லீம்  விவாக மற்றும் விவாகரத்து சட்டம்   ( Muslim Marriage and Divorce Act ) தொடர்பாகவும் அதில் பெண்களின் உரிமை சார்ந்த திருத்தங்களை எவ்வாறு கொண்டுவருவது என்பது தொடர்பாகவும் அமைந்திருந்தது.

இச் சட்ட விழிப்புணர்வு செயலமர்வை எமிஷா டேகள் (சட்டத்தரணி ) மற்றும் ஹஷானா ஷேகு இஷைதீன்  (சட்டத்தரணி ) ஆகியோர் வளவாளர்காளாக இருந்து Zoom செயலி மூலம் அமர்வை நடத்தினார்கள். இவர்கள் இருவரும் முஸ்லிம் தனிநபர் சட்ட சீர்திருத்த நடவடிக்கை குழுவின் இணை ஸ்தாபகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சட்ட விழிப்புணர்வு செயலமர்வு ஊடாக இலங்கையில் காணப்படும் குடும்ப சட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும், இலங்கையில் காணப்படும் இருவகை குடும்பங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளின் சட்ட ரீதியான விளைவுகள் தொடர்பாகவும் இதன்போது குறித்த பெண் சமூகத்தினருக்கு Zoom செயலி ஊடாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டன.







SHARE

Author: verified_user

0 Comments: