26 Sept 2021

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தின் மண்டாம்பக்கேணியில் பயன்தரும் மரக்கன்றுகள் 32குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம்  வவுணதீவு பிரதேசத்தின் மண்டாம்பக்கேணியில் பயன்தரும் மரக்கன்றுகள் 32குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் மண்டாம்பக்கேணி கிராமத்தில் பல் வகையான பயன்தரும்  மரக்கன்றுகள் 32 குடும்பங்களுக்கு  பசுமை இல்லத்தினால் ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கப்பட்டன.

பசுமை இல்லத்தின் ஏற்பாட்டில்   அல் அமைப்பின் கிராம ஒருங்கிணைப்பாளர் தீபா பிரதீபன் ஒழுக்கமைப்பில்  பசுமை இல்லம் அமைப்பின் மண்முனை மேற்கு இணைப்பாளர் செ.அருள்ராஜா தலைமையில் இந் நிகழ்வுஇடம்பெற்றது.

இதன்போது இக்கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 32 குடும்பங்களுக்கு இரப்பலா, தென்னங்கன்று, மரமுந்திரிகை, தேசிகன்று, கொய்யா, மாதுளை, வாழை, கமுகு, மாங்கன்று போன்ற பயன்தரும் 1952 மரக்கன்றுகள் 32 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது ஒரு பயனாளியின் தோட்டத்தில் சில மரக்கன்றுகளும் நடப்பட்டது. ஆரோக்கியமான குடும்பங்களையும் பசுமையான சூழலையும் ஏற்படுத்தும் வகையில் இம் மரக்கன்றுகள் இங்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.



 










SHARE

Author: verified_user

0 Comments: