21 Jun 2021

கிழக்கு கடற்கரையிலும் ஆமைகளும், டொல்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதால் மீன்களை விற்கமுடியாமல் வியாபாரிகள் திண்டாட்டம், வாழ்வாதாரம் பாதிக்கப்படடுள்ளதாக கவலை.

SHARE

கிழக்கு கடற்கரையிலும் ஆமைகளும், டொல்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதால் மீன்களை விற்கமுடியாமல் வியாபாரிகள் திண்டாட்டம், வாழ்வாதாரம் பாதிக்கப்படடுள்ளதாக கவலை.

கிழக்கு கடற்கரையிலும் ஆமைகளும், டொல்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதால் மீனவர்களும், மக்களும் அச்சத்தில் கடல் மீன்களை விற்கமுடியாமல் வியாபாரிகள் திண்டாட்டாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அப்பகுதியில் தொழிலுக்குச் செல்லாமல் தமது படகுகளையும். தோணிகளையும் கரையேற்றி வைத்துவிட்டு தொழிலின்றி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

கடலில் தமது கடற்பகுதியில் சிலரால் மேற்கொள்ளப்படும் சுருக்கு வலை மீன் பிடிக்கு மத்தியில் தாம் அன்றாடம் செய்து வரும் மீன்பிடித் தொழில் தற்பேதைய கொரோனா தாக்கத்தினால் நாடு முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் தமது கடற்பிராந்தியத்தில் கடல் ஆமைகளும், டொல்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவதானல் தாம் பெரிதும் மேலும் பாதிப்படைந்துள்ளதாக களுதாவளை, கல்லாறு, களுவாஞ்சிகுடி, உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றர்.

பல வருடக்கணக்காக இவ்வாறு தாம் கடலில் தொழில் செய்து வரும் இந்நிலையில் இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியதில்லை இது தென் மேற்கு கடற் பிராந்தியத்தில் அண்மையில் தீப்பற்றி எரிந்த என்.ரி.எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலிலிருந்து கடலில் கலந்துள்ள பொருட்களை கடல்வாழ் உயிரினங்கள் உண்டதனால்தான் இவ்வாறு அந்த உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவோ என எண்ணத் தோணுகின்றது.

இருந்தபோதிலும் துறைசார்ந்த அதிகாரிகளும்; அரசாங்கமும் மக்கள் கடல் உணவுகளை உண்ணலாமா? உண்ண முடியாதா என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் கடலில் பிடிபடும் சொற்ப மீன்களைக் கூட நாம் விற்பனை செய்ய முடியாதுள்ளதுள்ளோம், மக்கள் கொள்வனவு செய்வதங்கு அச்சமடைகின்றார்கள் என அப்பகுதி மீனவர்களும், மீன் வியாபாரிகளும், அங்கலாய்கின்றனர்.













 

SHARE

Author: verified_user

0 Comments: