21 Apr 2021

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பிரதான இடத்தை வகிக்கின்றது. கலாசாலை அதிபர் எம்.சி. ஜுனைட்

SHARE

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பிரதான இடத்தை வகிக்கின்றதுகலாசாலை அதிபர் எம்.சி. ஜுனைட்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பிரதான இடத்தை வகிப்பதாக அக் கலாசாலை அதிபர் எம்.சி. ஜுனைட் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை பரவலுக்குப் பின்னர் அக் கலாசாலையில் கல்வி பயிலும் 2020 -2021 கல்வி ஆண்டுக்கான ஆசி;ரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

கலாசாலையின் ஆசிரிய மாணவத் தலைவி கம்ஷியா லங்கேஸ்வரன் தலைமையில் ஆசிரிய கலாசாலை கேட்போர் கூடத்தில் திங்களன்று 19.04.2021 நிகழ்வுகள் இடம்பெற்றன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கலாசாலை அதிபர் ஜுனைட்

2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு ஆசிரியரும்  ஆசிரியர் பயிற்சி பெறாமல் மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது என்ற கல்வி அமைச்சின் உத்தரவுக்கிணங்க மட்டக்களபர்பு அசிரியர் கலாசாலையிலும் அநேக ஆசிரிய மாணவர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இலங்கையிலுள்ள எட்டு ஆசிரியர் கலாசாலைகளிலே மட்டக்கசளப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை பிரதான இடத்ததை வகிக்கின்றது.

கொரேரானா வைரஸ் இரண்டாம் அலை தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டின் நொவெம்பெர் மாதம் மூடப்பட்ட இக்கலாசாலை கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இன்றுதான் மீண்டும் நேரடிக் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படுகின்றது.

 

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கலாசாலை மூடப்பட்டிருந்த சமயத்திலும் எமது கலாசாலை மாணவர்களுக்கு ஒன் லைன் மூலமான கல்வி நடவடிக்ககைகள்  தொடர்ந்த வண்ணமே இருந்தன.

இனி வரும் காலங்களில் நேரடிக் கல்வி தொடரும்.

பயிற்சியும் கற்பித்தலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. அதனால்தான் ஆசிரியர்களுக்கான பயிற்சியை கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றுவிக்கப்படுவதற்கென 219 ஆசிரிய மாணவரக்ளை கல்வி அமைச்சு அனுமதித்துள்ளது.

ஆரம்பக் கல்வித் துறையில் 150 ஆசிரிய மாணவர்களும் சமூக விஞ்ஞானத்துறை 18 முதல்மொழி 15 றோமன் கத்தோலிக்கம் 18 ஆங்கிலத்துறை 7  விஞ்ஞானம் 11 ஆகியவற்றுடன் இரண்டாம் வருட மாணவர்கள் 52 பேர் உள்ளடங்கலாக  மொத்தமாக 219 ஆசிரிய மாணவர்கள் தமது பயிற்சியை தொடர்ந்து கொண்டுள்ளார்கள்.

01.09.1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை சுமார் 75 வருடங்ககு;குப் பின்னரே ஓரளவு அபிவிருத்தி கண்;டுள்ளது. இக்கலாசாலை பல சவால்களோடு இயங்கினாலும் ஆசிரிய மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதில் வெற்றி கண்டுள்ளதுஎன்றார்.

நிகழ்வில் பிரதி அதிபர் சி. மொரின் உப அதிபர் கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா உட்பட விரிவுரையாளர்கள் நிருவாக அதிகாரிகள் ஆசிரிய மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு அறிமுக உரைகளை நிகழ்த்தினர்.







SHARE

Author: verified_user

0 Comments: