26 Jan 2021

நாட்டிலே ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால், சுந்திரமாக அரசியல்வாதிகள், ஊடகவியலார்கள், செயற்படல் வேண்டும் - கலையரசன் எம்.பி.

SHARE

நாட்டிலே ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால், சுந்திரமாக அரசியல்வாதிகள், ஊடகவியலார்கள், செயற்படல் வேண்டும் - கலையரசன் எம்.பி.

இலங்கை நாட்டிலே தொடராக தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, இருக்கின்ற விடையங்களை தொடராகக் கொண்டுபோக வேண்டும் என்றநோக்குடன், இந்த அரசு செயற்படுகின்ற விடையங்ககளை. போனாமுனைமூலம் வெளி உலகிற்குக் கொண்டு வருகின்ற ஊடகவியலாளராக இருந்த சக்திகளை திட்டமிட்டு அழிக்கின்ற செயற்பாடு இலங்கை நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது.

என திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது.

முன்னதாக இந்நிகழ்வு திருகோணமலையில் அனுஸ்டிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் கொவிட் - 19 நிலமை காரணமாக இது மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து  கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில்  குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இந்த நாட்டில் ஒரு நிலையான நீதி இடம்பெறவேண்டும் என்பதற்காகத்தான் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஆண்டு நினைவுகளை வருடந்தோறும் சக ஊடகவியலாளர்கள் நடாத்தி வருகின்றனர்.

ஊடவியலாளர் சுகிர்தராஜன் அவர்கள் மட்டக்களப்பு மண்ணிலே பிறதிருந்தாலும், அவர் அம்பாறை மாட்டத்திலே இருந்து என்னோடு மிகவும் நெருக்கமாகப் பகழகியவர். அப்போது அவரை  ஊடகவியலாளர் என நான் அறிந்திருக்கவில்லை. ஆனலும் அவர் அப்போது எல்லைப் புறங்களில் கல்விகற்பித்தும் வந்தார். அவர் அப்போது சிறந்த கல்வியியலாளராக, சிறந்த அறிவிப்பாளராகவும், திகழ்ந்தவராவார். இந்நிலையில்தான் அவர் திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் ஆயுத அடக்குமுறையூடாக அடக்கப்படுகிறதே! இந்த மண்ணிலே தமிழினம், எதிர்காலத்தில் எவ்வாறு வாழும் என்கின்ற வினா எங்கள் மனத்தில் எழுந்தது. இந்த நாட்டில் தொடராக நீதி மறுதலிக்கப்படுவதுவும், ஜனநாயகம், குழிதோட்டிப் புதைக்கப்படுவதுவும், தொடராக இருந்து கொண்டிருக்கின்றது. வடகிழக்குப் பிரதேசங்களிலே தமிழ மக்;கள் தங்களுடைய சுயநிருணய அடிப்படையில வாழமுடியாது, தங்களுடைய சுத்தநிரமான அரசியல் செயற்பாடுகளைச் செய்யமுடியாமல் துன்புறுத்தப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலுக்கமைய இந்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்நெடுப்பதற்கு. தடையாக ஊடகவியலாளர்கள் இருந்து செயற்படுவதுதான் அவர்களுக்குச் சவாலாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளாக இருந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத்தில் பற்றுறுதிகொண்டு செயற்பட்ட பல தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். எமது இனம் தற்போது தலைதூக்கி நடக்கமுடியாத அளவிற்கு எமது மனித வளங்களையெல்லாம், அழித்து விட்டு ஏதோ இந்த நாட்டிலே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நாங்கள் நிருவாக ரீதியாக தமிழர்களை நசுக்குகின்ற ஒரு செயற்வடிவத்திலே, தற்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்றது.

எங்கு சென்றாலும் அரசியல் புலனாய்வாளர்களின் அடிக்குமுறை, நாங்கள் எங்கு சென்றாலும் அங்கு சென்று அரசியல் பிரமுகர்கள் வரவுள்ளார்கள் ஏன் அற்கு செல்கின்றீர்கள் என மக்கள் மீது ஒரு அடக்குமுறை சென்று கொண்டிருக்கின்றது. இந்த நாட்டிலே ஊடகவியலாளர்கள் மரணிக்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக தமிழ் ஊடகவியலாளர்கள்தான் மரணிக்கப் பட்டிருக்கின்றார்கள்மிகவும் துணீகரமான ஊடகவியலாளராக இருந்த நிலையில்தான் எமது சமூகத்தின் மிகவும் சொத்தாக விளங்கிய கல்வியில் கைவைத்து அந்த மரணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற அரச படைகளுக்கு எதிராக உண்மையை வெளியில் கொண்டு வந்ததற்காக திருகோணமலையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்து அவர் அழிக்கப்பட்டார். இதுதான் இந்த நாட்டின் நிலமை, இந்த நிலமை மாறவேண்டும்.

இன்றய இந்நிகழ்வில்கூட பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். ஜனநாயகமான நடைமுறைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால், சுந்திரமாக அரசியல்வாதிகள், ஊடகவியலார்கள், செயற்படல் வேண்டும். இவ்வாறான விடையங்களை இல்லாமல செய்து குறிப்பாக வடகிழக்குப் பிரதேசங்களில் இருக்கின்ற நிலமைகளை மாற்றியமைத்து, தமக்குச் சாதகமான நிருவாக ரீதியாக கட்டமைப்புக்களை ஏற்படுத்தி இந்த இனமே இல்லாமல செய்வதற்குரிய நிலமையை இந்த அரசாங்கம் முன்நெடுக்கிறது.

எனவே ஊடகவியலாளர்களின் ஜனநாயகரீதியாக கருத்துக்கள் எமது சமூகத்திற்கு மென்மேலும் வளம்பெற வேண்டும். எமது சமூகம் ஓரளவேனும் இவ்வாறு இருக்கின்றதென்றால் கடந்த காலத்தில் நடந்த விடையங்கள அனைத்தும் வெளியில் வந்தாலும், அரசியல்வாதிகளினாலும், சர்வதேசம் வரைத் திரும்பிப்பார்க்கச் செய்துள்ளது. எனவே எதிர்காலத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். தற்போது பிரதேச அரசியலால் கூறுபோடுகின்ற நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலமை அதிகரிக்ககுமானால், இந்நாட்டிலே தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா என்ற ஒரு வரலாறு இருக்கும். தமிழர்கள் இல்லை என்கின்ற ஒரு நிலமை மாறும். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம். என அவர் இதன்போது தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: