30 Dec 2020

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் மரணமடைந்த இரு சடலங்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் - வைத்திசாலைக்கு கடும் பாதுகாப்பு

SHARE

மட்டக்களப்பு  வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் மரணமடைந்த இரு  சடலங்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் - வைத்திசாலைக்கு கடும் பாதுகாப்பு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் மரணமடைந்த இரு  சடலங்களும் இன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு  செவ்வாய்க்கிழமை (29.12.2020) மாற்றப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிறு நீக நோயினால் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர் என அடையாளம் காப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 64 வயதுடையவரின் சடலமும் அட்டாளைசேனையைச் சேர்ந்த 54 வயதுடைய நபரின் சடலமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இவ்விருவரின் சடலங்களும் செவ்வாய்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தயிசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இந்த சடலங்கள் மாற்றப்பட்டுள்ளன.

குறித்த இரு சடலங்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

காத்தான்குடி ஆதா வைத்தியசாலையின் பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக காத்தான்குடி பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பாறூக், மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி ஆகியோர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்;கு சென்று அங்கு பாதுகாப்புக்கள் குறித்து ஆராய்ந்ததுடன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீருடன் கலந்துரையாடினர்.

இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்தியசாலையாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  





SHARE

Author: verified_user

0 Comments: