1 Oct 2020

வருமுன் காப்போம் மலேரியாத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

SHARE


வருமுன் காப்போம் மலேரியாத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

“வருமுன் காப்போம்” எனும் தொனிப்பொருளிலமைந்த மலேரியாத் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு  ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் புதன்கிழமை 30.09.2020 இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அப்துல் மஜீத் ஷ‪hபிறா வஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய மலேரியாத் தடை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேச செயலகப் பிரிவுக்குள் களப்பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இன்னபிற தரங்களிலுள்ள மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மலேரியாத் தடை விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் பிராந்திய மலேரியாத் தடை இயக்க வைத்திய அதிகாரி இளையதம்பி ஸ்ரீநாத் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டார்.

வெளிநாடுகளிலிருந்து மலேரியாத் தொற்றுக்குள்ளாகி நாட்டுக்குள் பிரவேசிப்போரால் உயிர்க் கொல்லியான மலேரியாத் தொற்று ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவே இத்தகைய வருமுன் காப்போம் விழிப்புணர்வுகள் நாடுபூராகவும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலிருந்து மலேரியா நோய்ப்பரவல் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கின்றபோதும் வெளிநாடுகளிலிருந்து மலேரியா நோய்த் தொற்றுக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்குள் பிரவேசிப்போரால் மீண்டும் மலேரியா அறிமுகமாகலாம் என்கின்ற முன்னெச்சரிக்கை காரணமாக இந்த வித விழிப்புணர்வுகளை சகலரும் பெற்றிருக்க வேண்டும் என்றும் சகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.










SHARE

Author: verified_user

0 Comments: