14 Oct 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும், 18000 இளம் விதவைத் தாய்மார்க்ள இருக்கின்றார்கள். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும், 18000 இளம் விதவைத் தாய்மார்க்ள இருக்கின்றார்கள். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றனர். 18000 இளம் விதவைத் தாய்மார்க்ள இருக்கின்றார்கள். 8000 இற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். 52000 பேருக்கு வீடுகள் இல்லை. 59000 பேருக்கு மலசலகூடம் இல்லை.  இந்த நிலையில்தான் தேர்தல் காலத்தில் கோழிக்குஞ்சுகள், மற்றும் மதுபானப்போத்தல்கள் கொடுக்கும் செயற்பாடுகளிலிருந்து நாங்கள் எமது மக்களை மீட்டெடுத்திருக்கின்றோம். என இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்ளப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் கணேசபுரம் கிராமத்தில் ஒரு இலெட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீற்றர் வீதியை புணரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் புதன்கிழமை (14) கலந்து கொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

நாங்கள் மக்கள் எதிர்பாற்பு கள அரசியலூடாக கடந்த அரசியலுக்குச் சென்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர் ஆளும் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெறமாட்டார் என பலர் கருத்துத் தெரிவித்தார்கள். இந்நிலையிலதான் கடந்த தேர்தலில் ஆளும் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே தமிழன் நான் மாத்திரமே. அதற்கு இறைவனும், இரவு பகலாக எந்தவித எதிர்பார்ப்புக்களுமின்றிச் செயற்பட்ட முற்போக்குத் தமிழர்  அமைப்பின் உறுப்பினர்களுமே காரணமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 33424 வாக்குகள் எமது கட்சிகுக் கிடைக்கப்பெற்றது. இதில் 2500 வாக்குகள் குறைவாகக் கிடைத்திருந்தால் கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு தமிழர் அமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். எனவே எமது கட்சிக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்ளுக்கும் இந்த வெற்றியை நான் சமர்ப்பிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றனர். 18000 இளம் விதவைத் தாய்மார்க்ள இருக்கின்றார்கள். 8000 இற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். 52000 பேருக்கு வீடுகள் இல்லை. 59000 பேருக்கு மலசலகூடம் இல்லை.  இந்த நிலையில்தான் தேர்தல் காலத்தில் கோழிக்குஞ்சுகள், மற்றும் மதுபானப்போத்தல்கள் கொடுக்கும் செயற்பாடுகளிலிருந்து நாங்கள் எமது மக்களை மீட்டெடுத்திருக்கின்றோம்.  நான் ஒரு தமிழ் ஆசியரியர் என்னால் புறனாநூறு, பற்றியும், தமிழ் மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்களையும் பேசமுடியும். ஆனால் இதுவரைகாலமும் உணர்ச்சி வார்த்தைகளையும், உசுப்பேற்றும் வார்கத்தைகளையும், பேச்சிப் பேசி மக்களை ஏமாற்றி வந்ததே எமது அரசியல் தலைவர்களின் போக்காக் இருந்து வந்துள்ளது. 

எமது பெண்சமூகத்தினர் வேறு இடங்களில் மாற்று சமூகத்திடம் சென்று வர்த்தக நிலையங்களில் வேலைசெய்கின்றார்கள். இந்த அரசாங்தக்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழர் ஒருவருக்கு இராஜாங்க அமைப்சுப் பதவி கிடைத்துள்ளமையானது அது எமது மக்களுக்குக் கிடைத்திருக்கின்ற வெற்றியாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுடைய் இணைந்து முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் அனைத்தும் அபிவிருத்தியில் மேலாங்கி நிற்கின்றன. மாறான எமது தமிழ் மக்கள் வாழும் எல்லைப் புறக்கிராமங்கள் சோமாலியா போல் காட்சியளிக்கின்றன. இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். 

கிழக்கு மாகாணத்தில் 58.9 வீதமாகவிருந்த தமிழர்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். இதற்கக் காரணம் 72 வருடகாமலாக தமிழர்கள் செய்த போக்கணம் கெட்ட அரசியலாகும். எமது சமூகத்தின் இளம் தலைமுறையினரை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும். அபிவிருத்தியுடன் கூடிய உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். அந்த அரசியல் கட்டமைப்புக்கு அனைவரும் கரம்கோர்க்குமாறு நான் உள்ளன்போடு அழைப்பு விடுக்கின்றேன். 

மத்திய கிழக்கு நாடுகளில் நமது இளைஞர்கள் பலத்த அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 25000 மேற்பட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கின்றார்கள் 8000 இற்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறில்லாமல் உள்ளார்கள். இதனைவிட எத்தனையோ இளைஞர்கள் வெளி இடங்களுக்கு கூலிவேலைகளுக்குச் செல்கின்றர்கள். 2800 சதுரக்கிலோமீற்றர் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 தொழிற்சாலைகளைக் கொண்டு வரமுடியாதுள்ளது. ஆனால் வாழைச்சேனைக் காகித ஆலையின் ஒரு கதவைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் திறக்கமுடியவில்லை. ஆனால் எமது அரசாங்கம் வந்து 60 நாட்களில் வாழைச்சேனை காகித ஆலை செயற்பட்டு வருகின்றது

எமது மக்கள் இன்னுமொருவரிடம் கையேந்தக்கூடாது. ஏனையவர்களுக்குக்குச் சமமான முறையில் எமது மக்கள் வாழவேண்டும். வெறுமனே கோழிக்குஞ்சுகளுக்கும், கிறிக்கட் மட்டைகளுக்கும் மக்கள் வாக்களிக்கக்கூடாது.  எதிர்காலத்தில் பெருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். 65000 வீடுகள் கடந்த காலத்தில் வடக்கு கிழக்கிற்கு வந்தது ஒரு வீட்டின் பெறுமதி 1280000 ரூபாவாகும். அதில் 6 வீடுகளைக்கூட கடந்த அரசாங்கம் கட்டிக் கொடுக்கவில்லை. இனிமேலும் பித்தலாட்ட அரசியல் செய்யமுடியாது.

எனவே நாங்கள் கடந்த காலங்களின் பெண்களையும் பாதுகாக்க தவற விட்டிருக்கின்றோம். நாங்கள் தற்போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகின்றோம். விரைவில் சீதன ஒழிப்பு மாநாடு ஒன்றை நடாத்த வுள்ளோம். எந்த தமிழ் மகனும் எந்தப் எண்ணிடத்திலும் சீதனம் பெற்று திருமணம் முடிக்கக்கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.





 

SHARE

Author: verified_user

0 Comments: