24 Oct 2020

கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

SHARE

கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும்போது அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தேசிய கொரோனா செயலணியுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும் தீர்மானத்தினை தேசிய கொரோனா செயலணியே மேற்கொள்ளும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: