28 Aug 2020

வேலோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா.

SHARE


வேலோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா.

சிவ பூமியாம் இலங்காபுரி  மட்டக்களப்பு சித்தாண்டி  சித்தர்களின் ஆதி இருப்பிடமான வேலோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை   மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவுக்கான பொதுக்கூட்டம் ஆலயத்தின் தலைவர் சு.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.

சித்தர்களின் ஆதி இருப்பிடம் வேலோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருக்கின்ற வேளை எதிர்வரும் 12.09.2020 சனிக்கிழமை கிரியா ஆரம்பம், 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று மறுநாள் திங்கட்கிழமை 14.09.2020 மகா கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இடம்பெறுவதற்கு இறையருள் கூடி இருக்கின்றது.

இக்காலப்பகுதிகளில் இடம்பெறுகின்றன பல்வேறுபட்ட விடயதானங்களை ஆராயும் பொதுக்கூட்டம் இடம்பெற்ற வேளை சமூக மட்ட அமைப்புக்கள் ஆலயங்களின் தலைவர்கள் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறுபட்ட விடயங்கள்  பேசப்பட்டதுடன் இக்காலப்பகுதியில்  ஒத்துழைப்பு அனைவராலும் வழங்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.

திருமூலரால் சிவபூமி எனப்போற்றப்படும் இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் பல்லாயிரம் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் குமரி கண்டத்தின் எஞ்சிய பாகமான குபேர தேசம் என்று உலகத்தாரால் போற்றப்படுவதுமான இலங்கைத் திருநாட்டில் கிழக்கு மாகாணத்தில் சிகண்டி முனிவரால் பிரதிஷ்டை செய்து அங்கேயே சமாதியான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு அண்மையில் இலுகுப் பொத்தானை கிராமத்தில் வேலோடு மலை காணப்படுகின்றது.

ஆதியில் இந்த இடம் போகர் பெருமானால் வேல் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம்.

அதனைத் தொடர்ந்து நாகர் குலத்தைச் சேர்ந்த மாமன்னன் நாகராஜனால் பல்லாயிரம் வழிபாடுகள் செய்து இன்றும் பல சஞ்சீவினி மூலிகைகள் குகைகள் அமானுஷ்ய இரகசியங்களை கொண்ட மலைத்தொடர்.

இந்த இடத்தில் இந்தக் கலியுகத்தை ஆளுகின்ற   அத்தனை சித்தர்களையும் பிரஸ்ட் செய்து மங்கலம் நிறைந்த சர்வாதி வருடத்தில் சுபமுகூர்த்தம் கூடியவேளையில் கும்பாபிஷேக குடமுழுக்கு நடத்த அகத்தியர் பெருமான் அருளால் பிறப்பித்து இருக்கின்ற நிலையில் இடம்பெறுகின்றன அனைத்து வழிபாடுகளிலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.











SHARE

Author: verified_user

0 Comments: