18 Aug 2020

மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அடுத்த 5 வருடங்களில் குறைந்தபட்சம் 40 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

SHARE

(.எச்.ஹுஸைன்)

மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற  உறுப்பினர்கள் இணைந்து அடுத்த 5 வருடங்களில் குறைந்தபட்சம் 40 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.

எதிர்வருகின்ற 5 வருட நாடாளுமன்ற காலத்திற்குள் மட்டக்களப்பில் இருக்கின்ற தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக குறைந்தபட்சம் 40 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செய்லூப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் வாவிக்கரையோர செய்னுலாப்தீன் ஓய்வுப் பூங்காவைப் புனரமைப்புச் செய்து ஏறாவூர் நகரசபைக்குக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் நகரசபைத் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 16.08.2020 இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட், இந்த மாவட்டத்திலே காலாகாலமாக இருந்து வந்த சீர்கேடான இனவாத அரசியல் வழிமுறைகளை மாற்றி ஆர்வமூட்டக் கூடியதான புதிய கனவான் அரசியல் கலாசாரம் ஒன்றை தமிழ் முஸ்லிம் எம்பிக்கள் இணைந்து உருவாக்க வேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இணைந்து புதிய போக்கிலே சிந்தித்தாலே ஒழிய சிறுபான்மை சமூகங்களுக்கு விமோசனம் இல்லாமல் போய் விடும்.

இனவாதத்தைப் பேசிப் பேசி சமூகத்தை ஏமாற்றுகின்ற ஒரு வெற்று அரசியல் தலைமைத்துவமாக என்னால் இருக்க முடியாது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு இலக்குடன் நாங்கள் பயணிக்க வேண்டும்குறைந்தபட்டசம் 40 ஆயிரம் தனியார்துறை வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதேநேரம் அரச துறைகளில் இருந்து வருகின்ற ஒட்டுமொத்த வேலைவாய்ப்புக்களிலே ஆகக் கூடியளவு வேலைவாய்ப்புக்களை எவ்வாறு எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டு வந்து இங்குள்ள தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கலாம் என்பதில் கவனஞ் செலுத்த வேண்டும்.

பொருளாதாரக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்இந்தமாவட்டத்திலுள்ள விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், சிறு உற்பத்தியளார்கள், கைத்தொழில் துறையில் ஈடுபடுவோர் இப்படிப்பட்ட எல்லாத் தரப்பினருக்கும் விமோசனமளிக்கும் வேலைத்திட்டங்களைப் பற்றி இந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

அதன் மூலமாகவே நீடித்து நிலைக்கும் அழிவில்லாத அபிவிருத்தியை இங்கு கொண்டு வர முடியும்.

இதனிடையே நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சிறுபான்மையினர் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

அந்த அச்சம் தேவையில்லை என்ற நம்பிக்கையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்அவ்வாறானஅரசாங்கத்தின் கைங்கரியங்களுக்கு எம்மாலானா எல்லா ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: