9 Aug 2020

நாங்கள் 3 ஆசனங்கள் கைப்பற்றலாம் என நினைத்திருந்தோம் ஆனால் ஒரு ஆசனத்தை எம்மால் பெற முடிந்திருந்தது.

SHARE

நாங்கள் 3 ஆசனங்கள் கைப்பற்றலாம் என நினைத்திருந்தோம் ஆனால் ஒரு ஆசனத்தை எம்மால் பெற முடிந்திருந்தது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கில் 7 மாவட்டங்களில் போட்டியிட்டது, எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா நோய் அச்சம் காரணமாக எமது கட்சியை மக்களிடம் முழுமையாக எடுத்துச் செல்ல முடியாத ஒரு சூழல் இருந்தது.  எமது கூட்டணியில் 5 கட்சிகள் இணைந்துதான் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். நாங்கள் இந்த தேர்தலில் 3 ஆசனங்கள் கைப்பற்றலாம் என நினைத்திருந்தோம் ஆனால் வடக்கில் மாத்திரம் ஒரு ஆசனத்தை எம்மால் கைப்பற்ற முடிந்திருந்தது 

என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தேல்வியடைந்த சுவீகரன் நிசாந்தன். வெள்ளிக்கழமை(07) இரவு மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதகாலத்திற்குள் நாங்கள் குறைந்தளவிலேனும் எது கட்சி வாக்குகளைப் பெற்றுள்ளது. மக்களிடத்தில் உரிமை சார்ந்த அரசியலையும், அபிவிருத்தி சார்ந்த அரசியலையும் மக்களிடத்தில் எடுத்துச் சென்றிருந்தோம், அதற்கு மக்கள்  எமக்கு ஆதரவை வழங்கினார்கள். கடந்த காலங்களில் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழிநடாத்தியதன் தார்ப்பரியமே தற்போது மக்க்ள அரசு சார்பான கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். 

எனவே இனிவரும் காலங்களில் ஆணை வழங்குவதாக எமக்கு உறுதியளித்துள்ளார்கள். அந்த வகையில் எமக்கு இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எமது கட்சி சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கிழக்கு மக்கள் உரிமையவிட அபிவிருத்தியை விரும்புகின்றார்கள். அந்த மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கும் இருக்கின்றது. எமது கூட்டணியிலுள்ள 5 கட்சியிலுள்ள தலைவர்களுடன் பேசி கிழக்கிற்கான ஒரு தலைமைத்துவத்தை, உருவாக்குவதங்கு நாங்க்ள செயற்படுவோம். அதுபொல் கிழக்கு மக்களின் முன்னேற்றத்திற்காக நாம் தொடர்ந்த பாடுபடுவோம்.

வருகின்ற வடக்கு கிழக்கு மாகாணசபைத் தெர்தலிலும் இளைஞர் யுவதிகளையுமு; எமது கட்சியில் நிறுத்தி கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஏன அவர் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: