26 Jul 2020

தமிழ் மக்களிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தங்களைப் பிரயோகிக்வில்லை. – வேட்பாளர் கணேசமூர்த்தி.

SHARE
தமிழ் மக்களிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தங்களைப் பிரயோகிக்வில்லை. – வேட்பாளர் கணேசமூர்த்தி.
தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணும்போதுதான் ஒரு சுபீட்சமான எதிர்காலம் உருவாககும். தந்தை செவ்வா அவர்கள் தமிழ் மக்களின் மாபெரும் தலைவர் அவர் ஈழத்துக் காந்தி எனும் அளவிற்கு போற்றப்பட வேண்டியவர். அவரால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போது தனி நபர்களால் மாசுபடுத்தப்பட்டிருக்கின்றது. என முன்னாள் பிரதியமைச்சரும், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியில் மீன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான சோ.கணேசமூர்த்தியின் வெள்ளிக்கிழமை (24) மாலை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியாவில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

என்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகள் சிலர் அக்கட்சியில் இணையுமாறும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கு தற்போது மாறி தனிநபர் போக்காகத்தான் அது தற்போது செயற்பட்டு வருகின்றது. அதனால் நான் அதில் இணையவில்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு நினைத்திருந்தால் பல விடையங்களைச் சாதித்திருக்கலாம் ஆனால் அவர்கள் அற்ப சலுகைகளுக்காகத்தான் செயற்பட்டிருந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு தமிழ் மக்களிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தங்களைப் பிரயோகிக்வில்லை. 

தற்போதைய ஜனாதிபதியைக் கொண்டு வந்தவர்கள் எனவும், மண்ணைக் காக்கப்போகின்றோம், கிழக்கை மீட்கப்போகின்றோம் என தெரிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும், தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருள் ஆணைக்குழு பற்றி எதுவித செயற்பாடுகளையும், மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள். 

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் நான் கோடிக்கணக்கில் நிதியைக் கொண்டு வந்து இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். ஆனாலும் சிலர் பிராந்தியவாதத்தை வகுத்து வைத்துள்ளமை தமிழ் மக்களுக்குப் பொருந்தாது. நாங்கள் வடக்கு வேறாகவும், கிழக்கு வேறாகவும், பிரித்துப் பார்க்க முடியாது, வடக்கு கிழக்கு  இணைந்துதான் நாம் செயற்பட வேண்டும். சமஸ்ட்;றி மூலமாகத்தான் வடக்கு கிழக்கு மக்கின் பிரச்சனைக்குத் தீர்வு பெறப்படும். அதைத்தான் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும், என அவர் இதன்போது தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: