30 Jul 2020

“செங்கோலோச்ச விழையும் பெண்ணுக்கொரு வாக்கு” சசல கட்சி பெண் வேட்பாளர்களையும் ஆதரித்து விழிப்புணர்வு.

SHARE

“செங்கோலோச்ச விழையும் பெண்ணுக்கொரு வாக்கு” சசல கட்சி பெண் வேட்பாளர்களையும் ஆதரித்து விழிப்புணர்வு.
“செங்கோலோச்ச விழையும் பெண்ணுக்கொரு வாக்கு” எனும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பில் வியாழக்கிழமை 30.07.2020 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற களமிறங்கியுள்ள அனைத்துக் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்கிளனதும் வேட்பாளர்களை அவர்கள் பெண்கள் என்ற ரீதியில் ஆதரித்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் மண்டபத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய மாவட்ட நிருவாகி கே. நிர்மலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சிலரும் பெண் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விழுது நிறுவன வளவாளர் ஜே. எஸ். புஸ்பலதா “அரசியலில்; பெண்களை ஊக்குவித்தலும் விழுது நிறுவனத்தின் வகிபாகமும் என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார்.

மேலும் அந்நிறுவன இணைப்பாளர் எஸ். சுகிர்தவிழி “மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தளர்;ந்தன” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு உரைவாற்றினார்.

இந்நிகழ்வில் பெண்ணுக்கொரு வாக்கு உறுதிமொழி ஏற்றலுடன் பெண் வேட்பாளர்களிடம் எதிர்பார்க்கும் மக்கள் சார்பான வேண்டுகொள்கள் மன் வைக்கப்பட்டதுடன் பெண் வேட்பாளர்களின் ஏற்புரையும் இடம்பெற்றது.

அத்துடன் கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பிழன் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட பெண்களின் விஞ்ஞாபனமும் பெண் வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.






SHARE

Author: verified_user

0 Comments: