28 Jul 2020

உரிமையைப் பெறுவதற்கான போராட்டம் தொடரவேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் - வேட்பாளர் உதயகுமார்.

SHARE

உரிமையைப் பெறுவதற்கான போராட்டம் தொடரவேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் - வேட்பாளர் உதயகுமார்.
இந்த நாட்டிலே சிங்கள பேரினவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் தனது உரிமையைப் பெறுவதற்காக 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றோம் எமது போராட்டத்தின் வடிவங்கள்தான் மாறிக்கொண்டு செல்கின்றதே தவிர அவை மளுங்கடிக்கப்படவில்லை எமக்கான உரிமை கிடைக்கும்வரை அவை தொடர்ந்துகொண்டுதான் செல்கின்றது.


எமது இந்த உரிமைப் போராட்டத்தினை மளுங்கடிப்பதற்கு பல உத்திகளை இந்த சிங்கள பேரினவாத அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்துதான் இருப்பதனை நாம் காணலாம். 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் இனி தமது உரிமைக்காக போராட மாட்டார்கள் இனி அவர்கள் எமது அடிமைகள் என நினைத்த இந்த பேரினவாத அரசுக்கு அப்போது நடைபெற்ற தேர்தலின் மூலமாக தமிழ் மக்கள் இன்னும் தமது உரிமையினைப் பெறுவதற்காக போராடுகிறார்கள் அப்போராட்டமானது ஆயுத போராட்டமாக அல்ல அது ஒரு அரசியல் போராட்டமாக மாறி வேறொரு பரிணாமத்தினைப் பெற்றுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள் வாக்களித்;து ஆணையிட்டதனை நாம் அறிவோம்.

என மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார் தெரிவித்தூள்ளார்.

திங்கட்கிழமை (27) மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினை எப்படியாவது குறைத்து இதனூடாக தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை மழுங்கடிப்புச் செய்வதற்கு இந்தத் தேர்தலினை ஒரு கருவியாக பயன்படுத்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு நினைக்கின்றது இதற்கான ஒழுங்கமைப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம்தான் எமக்கு எதிராக களமிறக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலும் அதில் உள்ள வேட்பாளர்களும். 

தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள் சில பல மாயையான தோற்றப்பாடுகளை நம் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்து அவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இந்த ஏமாற்று வித்தைகளை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உதிரிக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் பல கட்சிகளுக்கு பிரிவதனால் அவர்களை உறுப்பினர்களாக தெரிவு செய்வதனை விடுத்து அச் செயற்பாடானது மாற்று இனத்தவருக்கு எமது பிரதிநிதித்துவத்தினை தாரை வார்ப்பதற்கான செயற்பாடாகவும் மற்றும் அரசின் தமிழர்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்படுகின்ற அடக்கு முறைகளுக்கு உறுதுணை அளிப்பவைகளுமாவேதான் அது அமையும் இதனை தமிழ் வாக்காளப் பெருமக்கள் அறிந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே அன்பான தமிழ் வாக்காளப் பெருமக்களே எமது ஆணையினைக் கொண்டு எம்மையே அழிப்பதற்கான கபட நாடகத்தினை தற்போதைய பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது இதற்காக மூன்றாம்நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை இதற்காக அரசு பயன்படுத்தியுள்ளதானது எமது விரலைக் கொண்டு எமது கண்ணையே குத்துகின்ற செயற்பாட்டினை இந்த அரசு மேற்கொள்வதனை நாம் அறிவோம். 

த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் போடுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் எமது போராட்டத்தினை நலிவடையச் செய்து எம்மையே அழிப்பதற்றான ஆணையினை நாமே வழங்குகின்ற ஒரு துர்ப்பாக்கிய செயற்பாடாக அது அமையும் என்பதனை மறந்துவிடாதீர்கள் ஆகையால் சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து எமக்கு ஆணையிட்டு எமது உரிமை கிடைக்கும்வரை போராடுவதற்கு எம்முடன் தொடர்ந்தும் பயணியுங்கள் வெற்றி எமதே என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.    


   


SHARE

Author: verified_user

0 Comments: