4 Jul 2020

நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமாக இருந்தால் நேரடியாகக் கண்காணிக்கின்ற ஒரு முறைமை இருக்க வேண்டும். – சஜித் பிரேமதாஸ

SHARE
நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமாக இருந்தால் நேரடியாகக் கண்காணிக்கின்ற ஒரு முறைமை இருக்க வேண்டும். – சஜித் பிரேமதாஸ
எனது அன்புக்குரிய மக்களே நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இருக்கலாம், யாருக்காவது அனைத்து வேலைத் திட்டங்களையும், நேரடியாககக் கண்காணிக்கின்ற ஒரு முறைமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிலும் வெற்றிகாண முடியாது.

இந்த நாட்டிலே 9 மாகாணங்களும் 25 மாவட்டங்களும், 51000 கிராமங்களையும், கொண்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு  மாவாட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும், 345 கிராம சேவகர் பிரிவுகளையும் 1240 கிராமங்களையும், கொண்டுள்ளது. இவைகளுக்கு வகை சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எவ்.மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

விவசாயிகள், மீனவர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் வாழ்வாதாரங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து வேவைகளையும் பூரத்தி செய்ய வேண்டும், இவகைளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  இவைகளைப் பூர்தி செய்வதற்கு மக்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனூடாக ஒரு புதிய யுகத்தைப் படைக்கலாம். 

எனவே மக்கள் அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள் சாதி மத பேதம் காட்டாது, இனத்து வேசத்தைக் காட்டாது, இலங்கையர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். நாங்களும் மக்களின் வாழ்விலும், பாதுகாப்பிலும், பங்காளியாக இருந்து, மக்களின் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக கைகோர்ப்போம். உன அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது ஐக்கிய மக்க்ள சக்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற வெட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


































SHARE

Author: verified_user

0 Comments: