21 Jul 2020

மட்டக்களப்பை அபிவிருத்தி செய்ய முறையான திட்டம் என்னிடம் உள்ளது – சாணக்கியன்.

SHARE
மட்டக்களப்பை அபிவிருத்தி செய்ய முறையான திட்டம் என்னிடம் உள்ளது – சாணக்கியன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக உரிமையும் அபிவிருத்தியும் எனும் சிந்தனையுடாக நானும் செயற்படுவேன். அதற்குரிய திட்டமிடல்கள், எதிர்கால மட்டக்களப்பு 2030 எனும் அமைப்பை உருவாக்கி தூநோக்கு சிந்தனையை வைத்துள்ளேன். அதனை அமுல் படுத்துவதற்குரிய அதிகாரம்தான் எனக்குத் தேவைப்படுகின்றது. என என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இரா.சாணக்கின் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (20) எருவில் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்கள் உறுத்திப்படக் கிடைக்கும் நான்காவது ஆசனத்தைப் பெறுவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்கிறோம். இது இவ்வாறு இருக்க ஏனைய கட்சிகளின் சார்பில் எமது பட்டிருப்புப் பிரதேசத்தில் பிரதேசத்தில் மாத்திரம் 17 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆளுக்கு ஆயிரம் வாக்குகளைப் பெற்று மொத்தம் 17000 வாக்குகளைப் பெற்றாலும் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் நான்காவது ஆசனத்தைப் பாதிக்கும். எனவே எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் வாக்கழித்தால் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெறும். குறிப்பிட்ட அளவு நிதியைக் கொடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பிரிப்பதற்காதகத்தான் எமக்கு எதிராக பலர் களமிறக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எவருக்கும் 40 ஆயிரம் வாக்குகளைப் இந்த மாவட்டத்தில் பெறமுடியாது. 

தற்போது இளைஞர்கள் எல்லோரும், என்னுடன் இணைந்து வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றார்கள். இந்நிலையிலும் என்னைப் பற்றி பொய்யான விடையங்களைம், சிலர் முக நூல்வாயிலாக தெரிவிக்கின்றார்கள். அது சம்மந்தப்பட்டவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்னைப் பற்றி பொய்யான தகவர்களைத் தெரிவித்தால் அவ்வாறு தெரிவிப்பவர்களின் உண்மையான விடையங்களை நான் வெளிக் கொணர்வேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக உரிமையும், அபிவிருத்தியும் எனும் சிந்னையுடாக நானும் செயற்படுவேன். அதற்குரிய திட்டமிடல்கள் எதிர்கால மட்டக்களப்பு 2030 எனும் அமைப்பை உருவாக்கி தூநோக்கு சிந்தனையை வைத்துள்ளேன். அதனை அமுல் படுத்துவதற்குரிய அதிகாரம்தான் எனக்குத் தேவைப்படுகின்றது. என அவர் இதன்போது தெரவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: