30 Jul 2020

இரு கட்சிகளிடையே மோதல் ஒருவர் வைத்தியசாலையில்.

SHARE
இரு கட்சிகளிடையே மோதல் ஒருவர் வைத்தியசாலையில்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை (29) இரவு 9.20 மணியளவில்,  இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை (30) இவ்விடையம்குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மவாட்ட வேட்பாளர் தட்சணாமூர்த்தி தவறாணி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் ஆகியோர்வ்வேறு இடங்களில் இவ்விடையம் குறித்தது ஊடக சந்திப்புக்களை நடாத்தி இவ்விடையத்தை தெரிவித்தனர்.

வியாhழக்கிழமை தேத்தாதீவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தவறாணி…

புதன்கிழமை இரவு நான் எனது ஆதரவாளர்களுடன் மட்டக்களப்பிலிருந்து தேத்தீவு கிராமத்தால் வந்து கொண்டிருக்கும்போது ஸ்ரீ லாங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் போட்டியிடும் சந்திரகுமாரும் அவரது அதரவாளர்களும். எமது வாகனத்தை மறித்து தாக்குதல்களை மேற்கொண்டு எமது வாகனத்தை உடைப்பதற்கு முயற்சித்தனர். சிவப்புக்கலர் ரீசேட் அணிந்து கொண்ட சுமார்   15 கொண்ட அணியினர் எம்மைத் தாக்கினர், எனது குழந்தையுடன் தான் நான் வந்து கொண்டிருந்தேன் எனது 4 வயது பிள்ளையையும் இழுத்துவிட்டனர். எனது கழுத்தையும் நசித்தனர். பின்னர் எனது கணவருக்கும் அடித்தனர். பின்னர் மக்கள் கூட்டமாக அவ்விடத்தில் வந்தனர். அதன் பின்னர்தான் எம்மை விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். எமக்கு நடந்த சம்பவம் குறித்து நான் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். எமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  பொரிஸ் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சென்று தீக்குளிப்பேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீ லாங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் போட்டியிடும் சந்திரகுமார் இவ்வடையம் குறித்து களுதாவளையில் அமைந்துள்ள அவரது காரியலயத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்… 

மட்டக்கப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போது அதனை பொறுத்துக் கொள்ளாத சில சக்திகள் எமது ஆதளவாளர்களுக்கு தாக்குதல்களை நடாத்துகின்றனர். அந்த வகையில் புதன்கிழமை இரவு நான் களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேத்தாத்தீவில் அமைந்தள்ள எமது காரியாலயத்தில் இருந்த ஆதரவாளர் ஒருவருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் தவறாணியின் ஆதரவாளர்கள், தாக்குதல் நடாத்தியதில்  எமது அதரவாளரான 28 வயதுடைய கமலநாதன் திலக்கசன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரண்டாம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் இவ்வாறு சிலர் நடந்து கொள்கின்றார்கள், விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நாங்கள் பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றோம். கடந்த ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தல் கேட்டவர்கள் தற்போது எமது கட்சியில் ஆசனம்கேட்டு அது கிடைக்காத நிலையில் தற்போது எமது ஆதரவாளர்களைத் தாக்கி வருகின்றார்கள். நாங்கள் சட்டத்தை மதித்து செயற்பட்டு வருகின்றோம். இந்நிலையில்தான் எமது ஆதரவாளர் மீது தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் தேத்தாத்தீவைச் சேர்ந்த வேட்பாளர் செயற்பட்டுள்ளார்.  இதனால் நாம் காரியாலயத்தை வாடகைக்குப் பெற்ற நபர் தாக்கப்பட்டுள்ளார்.  

இவ்வாறு தவறாணியின் ஆதரவாளர்கள் வாகனம் ஒன்றில் வந்தே இச்சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். அதன்போத வேட்பாளரான தவறாணி அவரது சிறிய பிள்ளை ஒன்றையும் கொண்டு வந்துள்ளார். சிறு பிள்ளையை ஏன் இரவில் கொண்டு வந்தீர்கள் என வினவியபோது அவர்களது பாதுகாப்புக்காகத்தான் அந்த சிறு பிள்ளையயும் கொண்டு வந்தோம் என என்னிடம் அவர் தெரிவித்தார். நாங்கள் இதன்போது எதுவித அசம்பாவிதங்களிலும் ஈடுபடவில்லை. எம்மீது வீண் பழியைச் சுமத்துகின்றார்கள். 

இன்நிலையில் எங்களுடைய ஊருக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டாய் வேறு நபர்களுக்காக நீ உதவுகின்றாயா என என்னை ஒருவர் கைகளால் தாக்கினார். இதனால் எனது காது மற்றும், முதுகுப் பகுதயில் உபாதை ஏற்பட்டுள்ளது என களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 2 பிள்ளைகயின் தந்தையான 28 வயதுடைய கமலநாதன் திலக்கசன் தெரிவித்தார். இவ்வடையம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மன்னெடுத்துள்ளனர். 









SHARE

Author: verified_user

0 Comments: